வியாழன், 21 ஜூன், 2018

Fine Organics IPOவை வாங்கலாமா?

நேற்று RITES நிறுவனத்தின் ஐபிஒ பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: RITES IPOவை வாங்கலாமா?


அதே நேர வேளையில் Fine Organics என்ற மற்றொரு ஐபிஒவும் வெளிவந்துள்ளது. அதனை பற்றியும் கொஞ்சம் அலசலாம்.



Fine Organics நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

தாவர மற்றும் விலங்கு எண்ணெய்களில் இருந்து oleochemical வகை வேதிப்பொருட்களை தயாரித்து வருகிறது.

இவ்வாறு பெறப்படும் வேதிப்பொருட்கள் உணவு, பெயிண்ட், பிளாஸ்டிக், இங்க் போன்றவை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.


இந்த பொருட்கள் Specilized பிரிவிற்குள் வருவதால் லாப மார்ஜினும் கொஞ்ச ம் அதிகம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை Hindustan Unilver போன்ற நுகர்வோர் நிறுவனங்களும் அதிகம் பயன்படுத்துகின்றன.

இது தவிர, 60 நாடுகளுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

அதில், Slip additives என்ற பொருளை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் Fine Organics தான். உலக அளவிலும் Slip additives பொருளை அதிக அளவில் தயாரித்து வரும் நிறுவனம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பார்த்தால், நிறுவன வருமானம் வருடத்திற்கு 14% அளவிலும், லாபம் 21% அளவிலும் உயர்ந்து வந்துள்ளது.

அந்த வகையில் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது 64,000டன் உற்பத்தி கொள்ளளவு உள்ள இந்த நிறுவனம் மேலும் 32,000டன் உற்பத்திக்கு திட்டமிட்டுள்ளது.

அதனால் ஐபிஒவில் பெறப்படும் முதலீடு இந்த விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.

தற்போது ஒரு பங்கு விலை 783 ரூபாய்க்கு குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் P/E மதிப்பு 29க்கு அருகில் வருகிறது.

இதே துறையில் உள்ள மற்றொரு நிறுவனமான Galaxy Surfactant பங்குசந்தையில் 29 P/E மதிப்பில் வர்த்தகமாகி வருகிறது.

அதனால் விலை மலிவும் இல்லை. அதிகமும் இல்லை. அதனால் ஐபிஒ பட்டியல் லாபம் பெரிதளவு கிடைக்க வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் வேகமான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீண்ட கால நோக்கில் பங்கினை வாங்கி வைக்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக