புதன், 27 ஜூன், 2018

Bright Solar IPOவை வாங்கலாமா?

நேற்று Varroc Engineering IPOவை பற்றி எழுதி இருந்தோம்.


அதே நாளில் இன்னொரு ஐபிஒவிற்கும் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர். Bright Solar Limited.



இன்னும் ஜூலை 5 வரை நான்கு நிறுவனங்களின் ஐபிஒக்கள் வரவிருக்கின்றன. அதனால் தொடர்ந்து ஐபிஒ கட்டுரைகளே எழுத வேண்டியுள்ளது. மற்ற கட்டுரைகளுக்கு பொறுத்தருள்க!

Bright Solar நிறுவனமானது குஜராத்தை மையமாக கொண்டு விவசாயத்திற்கு தேவையான சோலார் பம்புகள் தயாரிக்கும் நிறுவனம்.

இது போக, பெரிதளவிலான ப்ரோஜெக்ட்களுக்கும் கன்சல்டன்சி சேவையைக் கொடுத்து வருகிறது.


தற்போது 18209 சதுர அடிக்கு புதிய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் ஐபிஒவிற்கும் வந்துள்ளது.

மொத்தமே 18 நிரந்தர பணியாளர்கள் தான் பணி புரிகின்றனர். அதனால் ஒரு சிறிய நிறுவனம் தான்.

இதனுடைய பிராண்ட்கள் PUMPMAN, BRIGHT SOLAR, BRIGHT SOLAR WATER PUMP என்ற பெயரில் அறியப்படுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஒரு பங்கின் விலை 2 ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டு உள்ளது.

தற்போது ஒரு பங்கின் விலை 36 ரூபாய் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். இதில் P/E மதிப்பை பார்த்தால் 11க்கு அருகில் வருகிறது. மலிவு தான்.

ஆனால்,

கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் 28 கோடியில் இருந்து 18 கோடியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், லாபம் 50 லட்சத்தில் இருந்து 1.7 கோடியாக கூடியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒரு சீரான வளர்ச்சி இல்லாததை நிதி அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது. சில வருடம் அதிகமாக கூடுகிறது, அதிகமாக  குறைகிறது என்பதால் எதுவும் கணிக்க முடியாத சூழ்நிலை.

வளர்ச்சிக்காக இல்லாமல், இவர்கள் நிலம் வாங்குவதற்கு மட்டும் நாம் நமது காசை கொடுக்க வேண்டிய தேவையில்லை.

அதனால் வெளிப்படையான நிலை தன்மை இல்லாததால் பங்கினை தவிர்க்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக