திங்கள், 25 ஜூன், 2018

Rajnish Wellness IPOவை வாங்கலாமா?

இன்று முதல் Rajnish Wellness என்ற நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.


இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை பற்றி பார்ப்போம்.முதல் முறையாக இந்திய பங்குசந்தையில் பாலியல் நல்வாழ்வு தொடர்புடைய ஒரு நிறுவனம் பங்குசந்தைக்குள் வருகிறது.

இந்த நிறுவனமானது பாதுகாப்பான உடலுறவிற்கு தேவையான காண்டம் உட்பட சில பொருட்களை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் PlayWin Capsules, PlayWin Condom, Rajnish Lotion, Play Win Spray, PlaWin Oil, Kasaav Powder என்ற ப்ராண்ட்களில் விற்கப்படுகிறது.


தற்போது இதே பிரிவில் ஆயுர்வேத தொடர்பாகவும் விரிவாக்கம் செய்து வருகிறது.

பெரும்பாலும் வட இந்திய மாநிலங்கள் தான் இந்த நிறுவனத்தின் முக்கிய சந்தை.

இந்த நிறுவனம் உற்பத்தி பிரிவை வேறு நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்து இருப்பதால் லாப மார்ஜின் சிறிது குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

மேலும் விரிவாக்கம், விளம்பர செலவீனங்கள் போன்றவற்றிற்காக ஐபிஒ மூலம் 10 கோடி ரூபாயை திரட்டுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வருமானம் இரண்டு மடங்கும், லாபம் ஆறு மடங்காகவும் அதிகரித்து உள்ளது.

ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 95 ரூபாய் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். அதில் P/E மதிப்பு 25க்கு அருகில் வருகிறது.

இதே துறையில் வேறு நிறுவனங்கள் பங்குசந்தையில் இல்லாததால் ஒப்பிட முடியவில்லை.

இது போக, கடந்த இரு ஆண்டுகளில் நிறுவன உரிமையாளர்கள் பங்கினை 7 ரூபாய் அளவிற்கே சராசரியாக வாங்கி உள்ளனர்.

அதனால் ஒரு சிறிய நிறுவனம், பெரிய அளவு தரவுகள் இல்லாதது போன்றவற்றின் காரணமாக இந்த அளவிற்கு ப்ரீமிய விலை கொடுப்பது அதிகம் தான்.

பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த துறை வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் பெரிய தெளிவில்லாத இந்த நிறுவன ஐபிஒவை தவிர்க்கலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக