திங்கள், 5 ஜனவரி, 2015

டாடா சன்ஸ் மீது DOCOMO புகார்

இந்திய டெலிகாம் துறையில் டாடாவும் DOCOMOவும் இணைந்து சேவைகளை அளித்தது அனைவரும் அறிந்ததே.

Micromax நிறுவனம் பங்குசந்தைக்குள் நுழைகிறது

கடந்த வருடம் மொபைல் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த Micromax நிறுவனம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

லாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு

TCS தனது 35,000 பணியாளர்களை நீக்க, செய்யவிருப்பதாக ஒரு உறுதிபடுத்தப்படாத செய்தி உலவி வருகிறது. TCS நிறுவனத்தின் சார்பிலும் மறுப்பு ஏதும் இல்லாததால் செய்தி உண்மையாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.

வெள்ளி, 2 ஜனவரி, 2015

ஜனவரி போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

முதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

வியாழன், 1 ஜனவரி, 2015

மாருதி கார் விற்பனை கணிசமாக கூடியது

கடந்த டிசம்பர் 2015ல் வெளியான கார் விற்பனை தரவுகளில் மாருதி நிறுவனத்தின் விற்பனை கணிசமாக கூடியுள்ளது.

பெட்ரோலுக்கு வரி கூட்டப்பட்டு விட்டது

நேற்று தான் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதால் கார் விலைகள் கூடுகிறது என்று கூறி இருந்தோம்.

இன்று பெட்ரோல், டீஸல் போன்றவற்றிற்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது Excise Duty. லிட்டருக்கு 2 ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது.



இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பயன் கிடைக்கப் போவதில்லை. இதன் மூலம் 6000 கோடி ரூபாய் வருமானம் அரசிற்கு கூடுதலாக கிடைக்க உள்ளது.

இந்த பணம் சாலை போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களின் அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

English Summary:
Petrol, Diesel excise duties increased  and fund goes to Govt for infrastructure development .


PACL மோசடி - ஏமாறுபவர்கள் இருக்க ஏமாற்றங்களும் தொடர்கின்றன

சஹாரா, சாரதா என்று சிட் பண்ட் நிறுவனங்களின் மோசடிகள் தொடருகின்றன. பலமான அரசியல் பின்புலங்களின் தொடர்பால் அவர்களுடைய ஏமாற்று வேலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன.