வியாழன், 1 ஜனவரி, 2015

பெட்ரோலுக்கு வரி கூட்டப்பட்டு விட்டது

நேற்று தான் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதால் கார் விலைகள் கூடுகிறது என்று கூறி இருந்தோம்.

இன்று பெட்ரோல், டீஸல் போன்றவற்றிற்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது Excise Duty. லிட்டருக்கு 2 ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பயன் கிடைக்கப் போவதில்லை. இதன் மூலம் 6000 கோடி ரூபாய் வருமானம் அரசிற்கு கூடுதலாக கிடைக்க உள்ளது.

இந்த பணம் சாலை போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களின் அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

English Summary:
Petrol, Diesel excise duties increased  and fund goes to Govt for infrastructure development .


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக