வெள்ளி, 9 நவம்பர், 2018

தேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை அடி மட்டத்தில் இருந்து எழுந்து 10,600 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது என்பது மகிழ்வான செய்தி தான்.

ஒரு புறம் உலக காரணிகள் மிக சாதகமாக இந்தியாவிற்கு அமைந்துள்ளது.



85 டாலருக்கு சென்ற கச்சா எண்ணெய் இன்று 70$ அளவை தொட்டு விட்டது.

கச்சா எண்ணெய் 70 டாலரில் நிலை பெறும் என்பது அதிக கணிப்பாகவும் உள்ளது.

அதன் பக்க விளைவாக இந்திய ரூபாய் மதிப்பும் ஓரளவு உயர்வை கண்டு வருகிறது.

ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்குவது என்பது இன்னவும் நடக்கவில்லை.

புதன், 7 நவம்பர், 2018

இன்று முஹுரத் ட்ரேடிங் ...

நமக்கு நேற்றே தீபாவளி கோர்ட் உத்தரவுடன் சுபமாக நடந்து விட்ட சூழ்நிலையில் இன்று வட இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.


நாம் நரகாசுரனை அழித்ததற்காக மட்டன் சாப்பிட்டு வெடியோடு கொண்டாடுகிறோம் என்றால்,



வட இந்தியர்கள் லக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை போன்று சுத்த சைவ தீப ஒளியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு இந்தியா, ஒரே மத பண்டிகை ஆனால் எத்தனை வேறுபாடுகள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா வாழ்க..!

இன்று பங்குசந்தையில் ஒரு விசேச தினம்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

வரியை வாரி வழங்க தொடங்கும் இந்தியர்கள்

மத்திய அரசின் செலவுகளுக்கு வரி மூலமே பிரதான வருமானம்.


இது பல வழிகளில் பெறப்பட்டாலும் மூன்றை முக்கியமாக கருதலாம்.



ஒன்று , 
தனிப்பட்ட நம்மை போன்றவர்கள் மாத சம்பளத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு கட்டும் Personal Income Tax.

இரண்டாவது, 
தனிப்பட்ட வியாபாரம் செய்து கிடைத்து வரும் வருமானத்தில் கட்டும் Personal Income Tax.

மூன்றாவது,
நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் கட்டும் Corporate Tax.

இந்த மூன்றும் சேர்ந்து தான் Direct Tax என்று அழைக்கப்படுகிறது.

புதன், 24 அக்டோபர், 2018

Amazon Great India சலுகைகளின் தொகுப்பு


அமேசான் தளம் அக்டோபர் 24 முதல் 28 வரை Great India Festival Offers என்ற பெயரில் சலுகைகளை வழங்குகிறது.

சரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை

இந்திய சந்தையின் அண்மைய வீழ்ச்சிகளுக்கு அடிப்படை காரணமாக பார்க்கப்படுவது கச்சா எண்ணெய் விலை தான்.


ஆறு மாதங்களுக்கு முன்பு வரை 50 டாலரில் வர்த்தகமாகி கொண்டிருந்த கச்சா எண்ணெய் ஒரு கட்டத்தில் 85 டாலரையும் தொட்டது.



இனி 100 டாலரை தொட்டாலும் ஆச்சர்யமில்லை என்று நிதி நிறுவனங்கள் கூற, ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைய தொடங்கியது.

இந்த பதற்றம் முழுமையாக இந்திய சந்தையை பாதித்து 20% அளவிற்கு நாம் முன்பில் இருந்து வீழ்ச்சியில் இருக்கிறோம்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு வகையில் பாதிப்பு இருந்தது.

திங்கள், 22 அக்டோபர், 2018

NBFC பங்குகளில் என்ன நடக்கிறது?

தற்போது இந்திய பங்குசந்தையில் நடக்கும் வீழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமும் சொல்லப்படுகின்றன.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

அடிப்படையால் காளையின் எழுச்சியைக் கண்ட சந்தை

கடந்த சில வாரங்களுக்கு பின் இந்த வார சந்தை கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது.


நேற்று முன்தினம் புதனன்று சந்தை 600 சென்செக்ஸ் புள்ளிகள் வரை சென்றது.



ஆனாலும் அடிப்படைகளை (Fundamental) என்பதை விட Technical என்பதே அதில் மேலோங்கி இருந்தது.

அதாவது பங்கு வர்த்தகம் செய்பவர்கள் சரிவுகளின் தொடக்கத்தில் Short Positions என்பதை எடுத்து இருப்பார்கள்.

ஆனால் மிக அதிக அளவில் சந்தை தொடர்ந்து சரிந்து விட்டதால் இனி மேலும் Short Positions வைத்து இருந்தால் அவர்களுக்கு நஷ்டமாகி விடும்.

அதனால் Short Positions நிலையை விற்று விட முனைவார்கள். இதனை Short Covering என்று அழைப்பர்.