புதன், 2 அக்டோபர், 2013

இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)

பதிவு பெரிதாகி விட்டதால் கடந்த பதிவை இரண்டாக பிரித்து இருந்தோம். அதனுடைய தொடர்ச்சி இந்த பதிவு..

முந்தைய பதிவினைக் காண,
இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்

கடந்த பதிவில் வாரன் பப்பெட் வாழ்வின் முதல் கட்டத்தைப் பார்த்தோம். இந்த பதிவில் அவரது அசுர வேக வளர்ச்சியைப் பற்றிய விடயங்கள் தொடர்கிறது.

இப்படி Berkshire Hathaway நிறுவனம் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளில் வாரன் பஃபட் முதலீடு மதிப்பு 1100% சதவீதம் அதிகரித்தது. இப்படி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.

இதிலிருந்தே அவர் பின்பற்றிய 'மதிப்பு முதலீடு' (Value Investing) தத்துவத்தின்  சக்தியை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது நமது பங்கு சந்தையிலும் இறக்கம் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் நல்ல பங்குகள் நன்றாகவே செயல்படுகின்றன.

அடுத்த கட்டமாக நலிந்த நிலையில் செயல்பட்ட See's Candy, National Indemnity போன்ற பல நிறுவனங்களை வாங்க தொடங்கினார். அந்த சமயங்களில் வியட்நாம் போர் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் முடங்கி கிடந்தது. எல்லோரும் விற்று வந்த சூழ்நிலையில் இவர் அதனை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

பங்கு மதிப்பீடல், நிறுவன மேலாண்மை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் இந்த மூன்றுமே இவரது முதலீட்டின் தாரக மந்திரம். இதனைப் பின்பற்றி வெற்றிகளை குவித்தார்.

இவ்வாறு 1965லிருந்து 1975 வரை உள்ள இடைவெளியில் மட்டும் இவரது நிறுவன முக மதிப்பு (Book Value) 20$லிருந்து 95$ஆக கூடியது. 2002ல் $11 பில்லியன் அமெரிக்க டாலருக்கு "forward trading" செய்தார். இந்த முதலீட்டில் மட்டும் 2 பில்லியன் டாலர் சம்பாதித்தார்.

இதனால் பஃபட் ஒரு பங்கை வாங்குகிறார் என்றால் பங்குச்சந்தையில் ஒரே நாளில் அந்த பங்கு 10% மதிப்பு கூடி விடும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.

இவர் வருடந்தோறும் நிறுவன ஊழியர்களுக்கு எழுதும் கடிதம் மிக பிரபலம். அந்த அளவுக்கு அவருடைய கணிப்புகள் சரியாக இருந்தன.

அவருடைய மேற்கோள்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம். பணம், பொருளாதாரம், முதலீடு என்ற மூன்றையும் மிக எளிதாக கூறியுள்ளார்.

சில பயனுள்ள மேற்கோள்கள்

இவரிடம் ஏன் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய மாட்டீர்கள் என்று கேட்ட போது. பங்கு வர்த்தகம் மிக எளிதாக இருக்கும் போது நான் ஏன் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார்.

சந்தை கீழே விழும் போது சற்றும் கவலைப்பட மாட்டார். ஒரு நாளில் ஒரு தடவை பங்கு விலையை பார்த்து விட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார். அந்த அளவுக்கு நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.

அவருடைய மொத்த சொத்து மதிப்பு 2008ல் 62 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரன் ஆனார்.

பஃபட் அவர்களின் எழுத்துகள் மற்றும் பேச்சு வெறும் பணத்தை மட்டும் பற்றி இல்லாமல் அதிக மனிதத் தன்மையும் கலந்து இருக்கும்.

தன்னுடைய உயிலில் தான் மற்றும் மாணவி இறப்பிற்கு பிறகு அணைத்து சொத்துகளும் அறக்கட்டளைகளுக்கு செல்லும் என்று எழுதி வைத்துள்ளார். அந்த அளவுக்கு வாரிசு சொத்து பங்கிடுதலை விரும்பாதவர்.

இப்பொழுது நீயா நானா கோபிநாத்தின் ஒரு வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.

"ஒருவர் செல்வந்தராக வேண்டும் என்றால் முதலில் அவரது மனம் செல்வந்தமாக இருக்க வேண்டும்".

ஆம். வாரன் பஃபட் நீங்கள் உண்மையிலே ஒரு செல்வந்தர் தான்.

ஒரு பதிவில் அவரது முழு வாழ்வையும் சொல்வது கடினம். அதனால் மேலும் விவரங்களுக்கு இந்த தமிழ் புத்தகத்தை பரிந்துரைக்கிறோம்.


அவரைப் பற்றிய நல்ல அருமையான புத்தகம். புகழ் பெற்ற அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் உள்ளடக்கி உள்ளது. ஒரு முறை படித்து பாருங்கள்.

English Summary:
The success story of warren buffet who made huge success on stock investment using value investing techniques.

தொடர்பான சில பதிவுகள்:
இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட் 
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?
பங்குச்சந்தை எப்படி தொடங்குவது?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: