செவ்வாய், 15 ஏப்ரல், 2014

இன்போசிஸ் தரும் சில பங்குச்சந்தை குறிப்புகள்

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது மந்தமாக இருந்தாலும் அவர்களது நிதி நிலை அறிக்கை வெளிவரும் போது, மற்ற நிறுவனங்களை விட ஒரு தெளிவான பாதையைக் காண்பிப்பார்கள்.


நேற்றைய அவர்களது நிதி நிலை அறிக்கையும் அப்படியே.

எப்பொழுதும் 'Guidance' மதிப்பை குறைத்து காட்டி அதன் பின் அதிக லாபத்தைக் காட்டுவதன் மூலம் முதலீட்டாளர்கள் நம்பிக்கையையும் பெற்று விடுகிறார்கள்.

எல்லோரும் 1.4% அளவு லாபம் குறையும் என்று எதிர்பார்த்த வேளையில் அதை விட நன்றாக 1.15% அளவு மட்டுமே லாபம் குறைந்துள்ளது.

வருடக் கணக்கில் பார்த்தால். இன்போசிஸ் கடந்த வருடத்தை விட 24% வருமானமும், 13% அதிக லாபமும் அடைந்து உள்ளது.

கடந்த வருடத்தில் 238 புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளதும், 50க்கும் மேற்பட்ட டீல்கள் கிடைத்துள்ளதும் நல்ல அறிகுறிகள்.



அதே நேரத்தில் நிறுவனம் சில பிரச்சினைகளையும் இனங்கண்டு உள்ளது.

ஐரோப்பாவைத் தவிர மற்ற பூகோள இடங்களில் வருமானம் வளர்ச்சி அடையவில்லை.

கடந்த வருடம் 16% என்று இருந்த பணியாளர்கள் விலகல் சதவீதம், தற்போது 18% என்று உயர்ந்துள்ளது. இது மனித வளத்தை முக்கியமாக சார்ந்து இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு பெருத்த பின்னடைவு.

இதனால் ஊதியத்தை அதிகரித்து பணியாளர்களைத் தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை. அப்படி ஊதியம் அதிகரிக்கும் போது அடுத்த வருட லாபத்தைப் பாதிக்கலாம்.

இதனால் அடுத்த வருடம் வளர்ச்சி 7~9% இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.

முன்பு போல் இல்லாவிட்டாலும், இன்னும் மென்பொருள் துறை போட்டியில் இருப்பதையேக் காட்டுகிறது. கொஞ்ச நாள் சரிவில் இருந்த மென்பொருள் பங்குகள் மீண்டும் உயர்வதற்கான வாய்ப்பாகக் கருதலாம்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நீண்ட கால முதலீட்டை விட குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடுவோர்களுக்கு ஏற்ற பங்காக இருக்கும் போல் தெரிகிறது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக