செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தை பற்றி நேற்றே எழுதி இருந்தோம். ஆர்பிஐ வட்டியைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தோம்.

பார்க்க: ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிர்பார்ப்பிற்கு முன் என்ன செய்வது?


இன்று சந்தை மற்றும் நமது எதிர்பார்ப்புகளையும் மீறி அரை சதவீத வட்டி குறைத்து சந்தைக்கு ஆனந்தம் அளித்தது.இதனால் இனி அடிப்படை வட்டி விகிதம் (Base Rate) 6.75% அளவிற்கு குறைந்துள்ளது.

அநேகமாக வங்கிகளும் இந்த வட்டி விகிதக் குறைப்பை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

நமது வீட்டுக் கடன்களுக்கான வட்டி 0.5% குறைந்தால் பத்து லட்ச ரூபாய் கடனுக்கு மாதத்திற்கு 500 ரூபாய் சேமிக்கலாம். அதனால் கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அதே நேரத்தில் டெபாசிட் செய்தவர்களுக்கு 0.5% வட்டி குறைவாக கிடைக்கும். இனி வரும் வருடங்களில் மேலும் வட்டி குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பிக்ஸ்ட் டெபாசிட் முதலீடுகளை வேறு எங்காவது திருப்புவது நலம்.

வருமான வரி கட்டுபவர்கள் நிறுவனங்கள் தரும் கடன் பத்திரங்களையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே இதுபற்றி எழுதி இருந்தோம். கட்டுரையை பார்க்க.

இன்றைய வட்டி குறைப்பு வங்கி பங்குகளுக்கு மிகவும் மகிழ்வான செய்தி ஆகும். அது போல் கடுமையான கடன் சுமையில் இருக்கும் கட்டுமானம், நிலக்கரி, மின்சாரம், இன்ஜினியரிங் தொடர்பான துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும் மகிழ்வான செய்தியாகும். அவர்கள் வாங்கிய கடனுக்கு குறைந்த வட்டி கட்டினால் லாப விகிதம் கூடும்.

மொத்தத்தில் ராஜன் சந்தையின் எதிர்பார்ப்பை மகிழ்வாக பூர்த்தி செய்துள்ளார்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக