செவ்வாய், 6 அக்டோபர், 2015

சந்தையில் திருத்தங்களை எதிர்பார்க்கலாம்..

ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைத்த பிறகு பல வங்கிகள் தொடர்ச்சியாக வட்டிக் குறைப்புகளை அறிவித்து வருகின்றன.


இதனால் வட்டி கட்டும் செலவு மிச்சமாகும் என்பதால் பல நிறுவனங்கள் நம்பிக்கையில் உள்ளன. இது பங்குகளிலும் எதிரொலித்தது.அதனால் தற்போது இந்திய பங்குச்சந்தை 27,000 புள்ளிகளுக்கு அருகில் வந்து உயர்வில் நிற்கிறது.

ஆனால் கொஞ்சம் வேகமாகவே மேலே வந்தது என்று சொல்லலாம்.

இன்னும் எதிர்பார்ப்பு என்ற நிலையில் தான் நாம் உள்ளோம். வட்டி குறையலாம், நிதி அறிக்கை மேம்படலாம், விறபனை கூடலாம், லாபம் அதிகரிக்கலாம் என்ற எல்லாமே எதிர்பார்ப்புகள் தான். இன்னும் நிதர்சன நிலைக்கு நாம் வரவில்லை.

இந்த நிலையில் நமது சந்தை இன்னும் மேலே போக சக்தி இல்லை என்றே சொல்லலாம். கூடிய புள்ளிகளில் 500 புள்ளிகள் வரை கீழே சென்று ஒரு திருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கைகள் வெளியாகும் நேரம் வந்து விட்டது.

இதில் நிறுவனங்கள் நல்ல நிதி அறிக்கைகள் கொடுத்து நம்பிக்கை அளித்தால் அடுத்த கட்டத்திற்கு மேலே செல்லவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த காலாண்டில் அதற்கு வாய்ப்பு குறைவு என்றே எதிர்பார்க்கலாம். சில நடவடிக்கைகளின் பலன்கள் நிறுவனங்களுக்கு உடனே கிடைக்க வாய்ப்பில்லை. இன்னும் இரண்டு காலாண்டுகளாவது காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

தற்போதைய நிலையில் உலக காரணிகள் தாக்கம் அதிக அளவில்லை. அரசின் கொள்கைகளில் பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லை.

நிறுவனங்களின் நிதி அறிக்கைகளே முக்கியம் பெறுகிறது. அதனால் பங்கு சார்ந்து முதலீடுகளை பார்ப்பது நல்லது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக