மோடி சொன்ன பிறகு கொரோனா உதவி தொகை பற்றி அதிக பேச்சு எழுந்தது. பங்குசந்தையில் கூட உயர்வை எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 200 புள்ளிகள் உயர்வை மட்டும் பார்த்தது. அதன் பிறகு மேலும் கீழே வந்து விட்டது.
நண்பர்கள் கூட இது தொடர்பாக கட்டுரை எழுத கேட்டு இருந்தார்கள். அதனால் வெள்ளியன்றே எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் புரியாமல் இருந்ததால் என்ன எழுதவென்றே தெரியவில்லை. சரி மூன்று நாளும் உட்கார்ந்து கேட்போம் என்று இருந்தோம். அது நான்கு நாளானது. இன்று ஐந்தாவது நாளோடு வில்லிசை முடிந்தது.
இறுதியில் நிர்மலாஜி ஒரு புன் முறுவலோடு நீங்கள் கேட்ட 20 லட்சம் கோடிக்கு கணக்கு கொடுக்குறேன் என்று சொல்லிய போது அவர்களுக்கே மீம்ஸ் தாக்கம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.






