பங்குச்சந்தை மற்றும் தனி நபர் மேம்பாடு பற்றி அதிக அளவில் எழுதி வந்துள்ள திரு,சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை படித்த அனுபவத்தை பதிவு செய்கிறோம்.
முதலில் ஆசிரியர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றி சொல்லி விடலாம்.
பல நிறுவனங்களில் மேலாண்மை துறைகளில் பணிபுரிந்து தற்போது அதிக அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார். இதைப் போல் மீடியாக்களிலும் தனிநபர் மேம்பாடு பற்றிய கருத்தரங்குகளிலும் காண முடிகிறது.
அவரது எளிய எழுத்து நடை எதனையும் எளிதாக புரிய வைத்து விடும் என்பதை அவரது அணைத்து புத்தகங்களிலும் காணலாம். இந்த புத்தகமும் விதி விலக்கல்ல..