செவ்வாய், 28 ஜூலை, 2015

பங்குச்சந்தை ரகசியங்கள் - புத்தக விமர்சனம்

பங்குச்சந்தை மற்றும் தனி நபர் மேம்பாடு பற்றி அதிக அளவில் எழுதி வந்துள்ள திரு,சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை படித்த அனுபவத்தை பதிவு செய்கிறோம்.


முதலில் ஆசிரியர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றி சொல்லி விடலாம்.



பல நிறுவனங்களில் மேலாண்மை துறைகளில் பணிபுரிந்து தற்போது அதிக அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார். இதைப் போல் மீடியாக்களிலும் தனிநபர் மேம்பாடு பற்றிய கருத்தரங்குகளிலும் காண முடிகிறது.

அவரது எளிய எழுத்து நடை எதனையும் எளிதாக புரிய வைத்து விடும் என்பதை அவரது அணைத்து புத்தகங்களிலும் காணலாம். இந்த புத்தகமும் விதி விலக்கல்ல..


இதற்கு முன்னர் அவர் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற புத்தகத்தை பற்றியும் எழுதி இருந்தோம்.

பார்க்க:  அள்ள அள்ள பணம் - ஒரு அறிமுகம்

அந்த புத்தகம் ஐந்து தொகுதிகளாக வெளிவந்து இருந்தது. பங்குச்சந்தை முதலீட்டில் உள்ள ஒவ்வொரு துணை பிரிவுகளையும் மிகவும் விரிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தக தொடர்.

ஆனால் வேகமான உலகத்தில் விரைவாக படித்து முடிக்கும் வழக்கம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அந்த சமயத்தில் அடிப்படைகளை தெரிந்து கொண்டு மீதியை அனுபவப்பூர்வமாக கற்று தெரிய சிலர் விரும்பலாம்.

அவர்களுக்கு இந்த புத்தகம் அதிகம் பயன்படும்.

இந்த புத்தகத்தை படிக்கையில் அது என்ன, இது என்ன என்று பங்குச்சந்தையில் உள்ள பல முதலீடுகளை பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் விரிவாக டிப்ஸ் போன்று எதுவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

பங்குச்சந்தை ரிஸ்குகள், தின வர்த்தகம், நீண்ட கால முதலீடு, Derivatives, Contracts என்று பல தலைப்புகளில் அடிப்படை விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விரைவாக அடிப்படைகளை தெரிவதற்கு இந்த புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனால் பங்குச்சந்தை என்றால் என்னவென்று தெரியாமல் முதலீடை தொடங்க விரும்பும் நண்பர்கள் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம். பயனுள்ளதாக இருக்கும்.

புத்தகத்தின் விலை 140 ரூபாய்.

அமேசானில் கீழே உள்ள இணைப்பில் கிடைக்கிறது.

Share Market Secrets By Soma Valliappan


தொடர்பான கட்டுரைகள்:



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக