புதன், 29 ஜூலை, 2015

சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

சஹாரா நிறுவனத்தை பற்றி தெரிந்து இருக்கும். ஓகோவென்று இருந்து மோசடி புகார்களால் ஒன்றுமில்லாமல் போனவர்கள். பொது மக்களின் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை ஸ்வாகா செய்தவர்கள்.


அதனை பற்றிய விவரமான கட்டுரையை இங்கு காணலாம்.
சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளிசஹாரா நிறுவனம் ம்யூச்சல் பண்ட் சேவையும் கொடுத்து வருகிறது. 24 பரஸ்பர நிதிகள் மூலம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயை ம்யூச்சல் பண்ட் மூலம் திரட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ சேவையில் ஈடுபட சஹாரா நிறுவனத்திற்கு தகுதி இல்லை என்று செபி அறிவித்து உள்ளது.

செபியின் உத்தரவின் படி,
  • புதிதாக எந்த பயனாளிகளையும் சேர்க்க கூடாது.
  • அடுத்த ஐந்து மாதங்களுக்குள் சஹாரா ம்யூச்சல் பண்ட் சேவையை வேறொரு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
  • அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் ஆறாவது மாதத்தில் மக்களிடம் சேகரித்த பணத்தை எந்த வித கட்டணமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது.

சஹாரா நிறுவனம் செய்த பிற மோசடிகளின் எதிர்விளைவாகவே இந்த அனுமதி ரத்தை பார்க்க வேண்டி உள்ளது.


இவ்வளவிற்கும் இந்த நிறுவனத்தின் பண்ட்கள் கடந்த ஒரு வருடத்தில் ரொம்ப மோசமாக செயல்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. ஆனால் அசல் என்னவாகுமோ என்ற பயம் எல்லாவிடத்திலும் இருக்கிறது. அதனால் நாணயம் என்பது பண விடயங்களில் லாபத்தை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ம்யூச்சல் பண்ட் சேவையில் சஹாரா ஒரு பெரிய நிறுவனமாக கருதப்படாததால் நம்மவர்கள் அதிக அளவில் முதலீடு செய்து இருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது ரிஸ்க் குறைவு என்று சென்று விடுவோம். அதிலும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.

ம்யூச்சல் பண்ட்டை நடத்தும் நிறுவனங்கள், பண்ட்டின் மேலாளர்களின் அனுபவங்கள் போன்றவற்றையும் நாம் வழக்கத்தில் கொள்வது அவசியமானது.

தொடர்பான கட்டுரைகள்:
Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி?

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக