வியாழன், 30 ஜூலை, 2015

ஷேர்கானை வாங்கிய பரிவாஸ்

இந்தியாவில் டிமேட் சேவை கொடுக்கும் நிறுவனங்களில் ஷேர்கானும் ஒன்று. (ShareKhan)


மற்ற டிமேட் ப்ரோகேர்களை விட குறைந்த தரகு கட்டணத்தில் நல்ல சேவையைக் கொடுத்து வரும் நிறுவனம்.இந்தியாவில் மொத்த டிமேட் கணக்குகளில் ஏழு சதவீத ஆளவு அவர்கள் கையில் உள்ளது. கிட்டத்தட்ட 12 லட்ச கணக்குகள் ஷேர்கான் நிறுவனத்திடம் உள்ளன.

ICICI, HDFC போன்று வங்கி சேவை கொடுக்காமலே டிமேட் சந்தையை பெற்ற நிறுவனங்களில் ஷேர்கான் முக்கியமானது.

தற்போது ஷேர்கான் நிறுவனம் BNP Paribas என்ற ஐரோப்பிய நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் இது வரை  வெறும் இரண்டு சதவீத மக்கள் தான் டிமேட் கணக்கினைக் கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் முப்பது சதவீத அளவு டிமேட் கணக்குகள் உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

இதனால் இந்தியாவில் ஏற்கனவே ம்யூச்சல் பண்ட் சேவையில் ஈடுபட்டு வரும் பரிவாஸ் நிறுவனத்திற்கு தமது சந்தையை விரிவாக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

தற்போது ஷேர்கானின் நூறு சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது.

மூன்று, நான்கு நிறுவனங்கள் போட்டியிட்ட சூழ்நிலையில் இறுதியாக பரிவாஸ் வென்றுள்ளது.

அப்படியே ஷேர்கான் பணியாளர்கள் பரிவாஸ் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளனர். இதனால் அவர்கள் சேவை மற்றும் நிர்வாக ரீதியாக பெரிதளவு மாற்றம் ஏற்படாது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக