புதன், 23 ஏப்ரல், 2014

24% அதிக லாபம் ஈட்டிய HDFC வங்கி. தொடரலாமா?

கிட்டத்தட்ட 30 காலாண்டுகளாக 30% சதவீத வளர்ச்சி கொடுத்து வந்த HDFC வங்கி நேற்று நிதி முடிவுகளை அறிவித்தது.


கடந்த காலாண்டில் 27%, இந்த காலாண்டில் 24% என்று கொஞ்சமாக வளர்ச்சி குறைந்துள்ளது.

ஆனால் இந்த காலக் கட்டத்தை எடுத்துக் கொண்டால் வங்கிகள் மிகவும் ஒரு கடினமான நேரத்திலிருந்து மீண்டு வந்துள்ளன. அதனால் அதே 30% வளர்ச்சியை எதிர்பார்ப்பது என்பது கடினமான ஒன்று.

நேற்று வெளியான YES Bank கூட 18% வளர்ச்சி மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்த லாப சதவீதம் நல்ல சதவீதமே .



நிலையான வாராக் கடன் சதவீதமும், வட்டி வருமான வளர்ச்சியும் நன்றாக இருப்பது கூடுதல் பிளஸ். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1.5% அளவு பங்கு உயர்ந்து விட்டது.

HDFC வங்கி நமது போர்ட்போலியோவில் உள்ள ஒரு பங்கு ஆகும். இதுவரை 20% லாபம் கொடுத்து உள்ளது.

நமது போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.
'முதலீடு' போர்ட்போலியோ

நமது போர்ட்போலியோவை தொடரும் நண்பர்கள் இந்த பங்கில் தொடரலாம். இன்னும் 10% எளிதில் மேலே கடக்கும் போல் தெரிகிறது. அதாவது 800 ரூபாயைக் கடக்கலாம்.

கடந்த காலாண்டில் வங்கிகளின் வளர்ச்சி விகிதம் இங்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இன்னும் HDFC வங்கி முன்னிலையிலே உள்ளது.

வங்கிகளின் வளர்ச்சி விகிதம் - ஒப்பீடு 


ஏற்கனவே HDFC வங்கி பங்கில் முதலீடு செய்தவர்கள் ஒரு பங்கிற்கு 6.85 ரூபாய் டிவிடென்ட் பெறுகிறார்கள். இது ஜூன் மாதத்தில் உங்கள் கணக்கில் வரும்.

HDFC தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இந்த பதிவையும் பாருங்கள்.

RBIக்கு வந்த வித்தியாசமான சட்ட சிக்கல்



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு