திங்கள், 27 பிப்ரவரி, 2017

மத்திய அரசின் தங்க முதலீட்டு திட்டத்தில் ஒரு வாய்ப்பு

தங்கத்தை நகைகளாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கு கணிசமாக செலவழிக்க வேண்டி வரும். இதற்கு மட்டும் 15 முதல் 20% வரை தேவையில்லாமல் போக வாய்ப்பு உண்டு.


தங்கத்தை முதலீடாக கருத்துபவர்களுக்கு இந்த செய்கூலி, சேதாரம் என்பது தேவையில்லாத செலவுகள் தான்.அதனை தவிர்ப்பதற்கு மத்திய அரசே தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு Sovereign Gold Bonds என்று பெயர்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது அன்றைய சந்தை விலையைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவாக தங்கத்தை பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம்.  தங்க விலை ஏற, ஏற இந்த முதலீட்டு பத்திரங்களின் மதிப்பும் கூடி விடும்.


இதற்கு வருடந்தோறும் 2.5% வட்டி வழங்குவார்கள் என்பது கூடுதல் சிறப்பு. வங்கியில் லாக்கரில் நகைகளை வைத்தால் நாம் காசு கொடுக்க வேண்டி வரும். ஆனால் இங்கு அரசு நமக்கு வட்டி தரும் என்பது சிறந்த பலன்.

இன்று பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை ஏழாவது முறையாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறைந்த பட்சமாக ஒரு கிராம் முதல் அதிக பட்சமாக 500 கிராம் வரை மதிப்புடைய பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். தற்போது ஒரு கிராமிற்கு 2893 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் டீமேட் கணக்குகள் மூலமும் இதனை வாங்கி கொள்ளலாம்.  டீமேட் கணக்கு மூலம் வாங்கினால் பங்குசந்தையிலும் இந்த பத்திரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விற்றுக் கொள்ளலாம்.

இந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு கிடைக்கும் லாபத்திற்கு Capital Gain Tax கிடையாது என்பது குறிப்பிட்டத்தக்கது. அதே நேரத்தில் அவசர தேவைக்கு கடன் பெறுவதற்கும் ஈடாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்க விலை குறைந்து இருக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசின் இந்த பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது.

பொதுவாக ஒரே கூடையில் அணைத்து முட்டைகளும் போடக் கூடாது என்பது முதலீட்டில் சொல்லப்படும் போது அடிப்படை நாதம்.

அணைத்து முதலீடுகளையும் பங்குசந்தையில் போட்டால் இழப்பு வரும் போது மொத்தமாக தாங்க முடியாது. அதே போல், பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்தா முதலீடு வளரவே செய்யாது.

அந்த வகையில் தங்கம், பிக்ஸ்ட் டெபாசிட், பங்குசந்தை போன்றவற்றை கலந்து வைத்து இருப்பது அதிக பலனளிக்கும். அந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் பகுதியை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.


Sovereign Gold Bondsஇதற்கு ds
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: