நாம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை பற்றி எழுதி இருந்தோம். இந்திய பங்குசந்தையில் வாறன் பப்பெட் போன்று நீண்ட கால முதலீட்டில் வெற்றி அடைந்தவர்.
பார்க்க: இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்
அவருக்கு அடுத்து ராதாகிருஷ்ணன் தமணியைக் குறிப்பிடலாம். ஆனால் இவர் பங்குசந்தை நிறுவனங்களில் மட்டுமல்லாமல் தமது சொந்த நிறுவனங்களிலும் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார். அதில் ஒன்று தான் Avenue Supermarts. இந்த நிறுவனம் வரும் மார்ச் 8ந் தேதி முதல் பங்குசந்தைக்கு வருகிறது.
Avenue Supermarts நிறுவனம் தான் மஹாராஷ்டிரா, குஜராத்தில் புகழ் பெற்று இருக்கும் D-Mart என்ற பிரிவை நடத்தி வருகிறது. D-Mart என்பது ரிலையன்ஸ் ரீடைல், பிக் பஜார் போன்று சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வரும் நிறுவனம்.
ஆனால் மற்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களை விட D-Mart தான் அதிக லாப மார்ஜினுடன் இயங்கி வருகிறது என்பது ஒரு முக்கியமான விடயம்.
Big Bazaar நிறுவனம் 18,000 கோடிக்கு வர்த்தகம் செய்து 306 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது. அதே நேரத்தில் டிமார்ட் 11,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து 450 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது. மற்ற நிறுவனங்கள் இப்பொழுது தான் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இது தவிர வருடத்திற்கு 40%க்கும் மேல் வியாபாரம் மற்றும் லாபத்தில் D-Mart வளர்ச்சி காட்டி வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் லாபம் மட்டும் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
D-Mart நிறுவனத்தின் விளமபரம் வித்தியாசமானது. மற்ற சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் பண்டிகை தினங்கள், மற்றும் வார இறுதிகளில் சலுகைகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டு வரும் வேளையில் இந்த நிறுவனம் Every Day Low Cost என்ற மாடலை பின்பற்றி வருகிறாரக்ள். அதாவது சப்ளை செய்யும் வெண்டர்களிடம் நல்ல உறவு நீடிப்பதால் குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்க முடிகிறது.
அதே போல், D-Mart நிறுவன கடைகள் புறநகர் மற்றும் இரண்டாவது கட்ட நகரங்களை குறி வைத்து இருப்பதால் குறைந்த வாடகையில் அல்லது சொந்த கட்டிடங்களில் இயங்க முடிவது லாப மார்ஜினை கூட்ட உதவுகிறது.
தற்போது ஒரு பங்கு விலை 290 முதல் 299 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட பங்கு விலையில் P/E மதிப்பு 40க்கு அருகில் வருகிறது.
அண்மையில் தான் ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்றுக் கொள்வதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர அண்மையில் அதிக அளவு கடைகளை திறந்துள்ளது. இந்த விரிவாக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் அதிக லாப மார்ஜின் போன்றவற்றின் காரணமாக P/E மதிப்பு 40 என்பதனை நியாயப்படுத்த முடிகிறது.
Grey Marketல் தற்போது 500 வரை வர்த்தகமாகி வருகிறது. பட்டியலிடப்படும் போது குறைந்த பட்சம் 100 ரூபாய் வரை பங்கிற்கு லாபம் தரலாம். அதனால் பங்கினை வாங்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக