வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

குழந்தைகளின் படிப்பிற்கு ஏற்றதொரு LIC பாலிசி

ஒவ்வொருவரும் அன்றாட தேவைகளுக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் கொடுப்பது குழந்தைகளின் எதிர்கால நலன் தான்.



முன்னர் பெண் குழந்தைகள் என்றால் திருமண செலவு, ஆண் என்றால் படிப்பு செலவு என்பது அதி முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது இரு பாலருக்கும் படிப்பு செலவும் முக்கியத் துவம் பெருகிறது.



பணவீக்கம் என்பது இங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இன்று மேற்படிப்புக்கு வருடத்திற்கு ஒரு  லட்ச ரூபாய் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னும் இருபது வருடங்கள் கழித்து சராசரியாக 8% பணவீக்கம் இருப்பின் ஐந்து லட்ச ரூபாய் வருடத்திற்கு ஆக வேண்டி வரலாம். அதற்கும் நாம் தயார் படுத்திக்க கொள்ள வேண்டும்

அதே நேரத்தில் இன்றைய விலைவாசி மிகுந்த உலகில் செலவு போக சேமிப்பு என்பதே சொற்பம் தான் மிஞ்சுகிறது. அதுவும் முறையாக பராமரிக்கப்படா விட்டால் ஏதேனும் வழியில் செலவாகி விடும். அதற்கு நாம் இன்சூரன்ஸ் பாலிசிகளை நாடுவது சரியானதாக இருக்கும்.


இன்சூரன்ஸ் பாலிசி என்று எடுக்கும் போது நாம் செய்த முதலீடு போனஸுடன் திரும்பி கிடைக்கும். அதே நேரத்தில் இன்சூரன்ஸ் செய்யும் பெற்றோருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படின் குழந்தைக்கு ஒரு தொகை காப்பீடு போன்று வந்து விடும். இந்த அசம்பாவித நிகழ்வு அரிதானது என்பதால் விட்டு விடுவோம்.

அதே சமயத்தில் இன்சூரன்ஸ் பாலிசி என்று எடுக்கும் போது 15 வருடங்கள் முதல் 20 வருடங்கள் என்பது வழக்கமானது. அவ்வளவு வருடங்கள் பாலிசிக்கு தனியார் நிறுவனங்களை நம்பி போனால் அவை அந்த சமயத்தில் எவ்வாறு செயல்படும் என்பதில் சந்தேகம் வருகிறது. அதனால் முடிந்த வரை அரசு நிறுவனமான LICக்கு செல்வது மிக்க நன்று.

பல விதங்களில் காப்பீடு முறைகளை கொண்டுள்ள எல்ஐசியில் குழந்தைகள் நலன் என்பதற்கு என்று New Children's Money Back Plan என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த திட்டம் நாம் மேலே கூறியவாறு காப்பீடு, முதலீடு என்ற இரண்டையும் கொண்டே வருகிறது.

அதே நேரத்தில் நமக்கு கிடைக்கும் ரிட்டர்னை நான்கு பருவங்களில் பிரித்து கொடுத்து விடுவார்கள். 

உதாரணத்திற்கு 10 லட்ச ரூபாய்க்கு இந்த பாலிசி எடுத்தால் LICயின் போனஸ் எல்லாம் சேர்த்து 25வது வருடத்தில் 25 லட்ச ரூபாய் வரும். மற்ற பாலிசிகளில் இந்த 25 லட்ச ரூபாய் என்பது இறுதியில் தான் கிடைக்கும்.

ஆனால் New Children's Money Back Plan பாலிசியில் குழநதைகளின் 18வது வயதில் 2 லட்ச ரூபாயும், 20வது வயதில் 2 லட்ச ரூபாயும், 22வது வயதில் 2 லட்ச ரூபாயும் கிடைக்கும். மீதி 19 லட்ச ரூபாய் 25வது வயதிலும் கிடைக்கும்.

அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கு இந்த பாலிசி மிகவும் பொருந்தும். முதல் மூன்று வருடங்களில் கிடைக்கும் தொகையை படிப்பு செலவிற்கும் மீதியை திருமண செலவிற்கும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த பத்து லட்ச ரூபாய்க்கு மாதம் 3531 ரூபாய் ப்ரீமியம் (+ 135 ST வரி)  கட்ட வேண்டும். அதே நேரத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டுவதாக இருந்தால் 10788 (+405 ST வரி) ரூபாயும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்றால் 21345 (+800 ST வரி) ரூபாயும், வருடத்திற்கு ஒரு முறை என்றால் 42227(+1584 ST வரி)  ரூபாயும் கட்ட வேண்டும்.

இதில் மூன்று/ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டுவது என்பது எளிதான ஒன்று.

வருமான வரி கட்டும் இந்த நேரத்தில் வரி விலக்கு பெறவும் இந்த பாலிசி உதவும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: