ஞாயிறு, 19 மார்ச், 2017

CL Educate IPOவை வாங்கலாமா?

இன்று முதல் (மார்ச் 20) CL Educate நிறுவனத்தின் ஐபிஒ வெளிவருகிறது.


CL Educate என்பது கல்வி சேவைகளை கொடுத்து வரும் Career Launcher நிறுவனமாகும்.MBS, வங்கி மற்றும் சட்டம் தொடர்பான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது இந்த நிறுவனத்தின் முக்கிய பணியாக இருக்கிறது.

இது தவிர, அரசின் தொழில் முறை பயிற்சி போன்றவற்றிலும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

பங்குச்சந்தை மூலம் கிட்டத்தட்ட 250 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 500 முதல் 502 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்.

87 பெரு நகரங்களில் 151 பயிற்சி மையங்கள் அமைத்து வளர்ந்து வருவது என்பது இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம்.

நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் போன்றவற்றை கருத்தில் கொண்டால் கிட்டத்தட்ட பத்து சதவீத அளவிற்கு வளர்ந்து வருகிறது.

ஆனால் லாப மார்ஜின் ஒன்பதில் இருந்து எட்டு சதவீத அளவு குறைந்து வருவது கவலைக்குரிய விடயம்.

அடுத்து, அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களில் இருந்து நிலுவையில் வரும் வருமானம் மட்டும் 125 கோடி ரூபாய் உள்ளது. இது கிட்டத்தட்ட நிறுவனத்தின் ஐந்து மாத வருமானத்திற்கு சமமாகும் என்பது எதிர்மறையான விடயம்.

இந்த நிறுவனம் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், புத்தக தயாரிப்பு, நிறுவனங்களுக்கு பயிற்சி சேவை அளித்தல் என்று பல பிரிவுகளில் இயங்கி வருகிறது. ஆனால் அவற்றில் சில பிரிவுகள் மட்டும் தான் லாபம் கொடுத்து வருவது எதிர்மறை விளைவை தருகிறது.

மதிப்பீடலை பார்த்தால்,

ஐபிஒவில் குறிப்பிட்டிருக்கும் விலையானது நிறுவனத்தின் P/E மதிப்பை 23 என்ற அளவில் காட்டுகிறது.

ஆனால் இதே துறையில் சந்தையில் இருக்கும் Career Point, MT Educare போன்ற நிறுவனங்களின் P/E மதிப்பு 17, 11 என்ற அளவிலே வர்த்தகமாகிக் கொண்டு வருகின்றன.

அதனால் மதிப்பீடலும் இந்த நிறுவனத்திற்கும் சாதகமில்லை. கடுமையான போட்டி போன்றவற்றை கருத்தில் கொள்கையில் லாப மார்ஜின் பெரிய அளவில் முன்னேற்றமடைய வாய்ப்புகள் குறைவே.

இவ்வாறு பல எதிர்மறை காரணங்கள் இருப்பதால் CL Educate IPOவை தவிர்க்கலாம்.

தொடர்பான பதிவு:
Avenue Supermarts IPOவை வாங்கலாமா?

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக