திங்கள், 20 மார்ச், 2017

SANKARA IPOவை வாங்கலாமா?

நேற்று தான் CL Educate IPOவை பற்றி எழுதி இருந்தோம். அந்த IPOவின் மூன்று நாட்கள் விண்ணப்பிக்கும் தேதி முடியும் முன்னரே அடுத்த ஐபிஒ வெளிவந்து விட்டது.


ஐபிஒவில் முதலீடு செய்பவர்கள் என்பவர்கள் அதற்கென்று ஒதுக்கிய பணத்தை தான் திரும்பி திரும்பி முதலீடு செய்வார்கள். பணம் ஒரு இடத்தில லாக் ஆகி விட்டால் அப்புறம் புதிய காசில் புதிய ஐபிஒ வாங்க யோசிக்கத் தான் செய்வார்கள்.



அந்த வகையில் செபியோ அல்லது ஐபிஒ வெளியிடும் நிறுவனங்கள் இந்த விடயத்தில் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் இன்னும் அதிக அளவில் டிமெண்டை உருவாக்க முடியும்.

Shankara Building Products Limited என்ற நிறுவனம் இன்று மார்க் 22 அன்று ஐபிஒ வெளியீட்டை ஆரம்பிக்கிறது.

வீடு மற்றும் அலுவலக கட்டுமானம் தொடர்பான பொருட்களை ஒரே இடத்தில வாங்கும் அளவு ஷோ ரூம்களை வைத்துள்ளது.

இதன் கீழ். சிமெண்ட், செங்கல், ஸ்டீல், பைப், டைல்ஸ், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் என்று பலவற்றையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.

2012ல் 43 ஷோ ரூம்களை வைத்து இருந்த இந்த நிறுவனம் தற்போது 103 ஷோ ரூம்களை வைத்துள்ளது.

வருமானமும் வருடத்திற்கு 10% CAGR அளவிலும், லாபம் 9% அளவிலும் அதிகரித்து வருகிறது.

இது வரை என்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு அதிக அளவில் வியாபாரம் செய்து வந்த சங்கரா தற்போது ரீடைல் வியாபாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதனால் இரண்டு வருடங்களுக்கு முன் 24% அளவு இருந்த ரீடைல் வருமானம் தற்போது 40% என்ற நிலையை அடைந்துள்ளது.

என்டர்பிரைசஸ் நிறுவனங்களைக் காட்டிலும், ரீடைல் பிரிவில் அதிக லாப மார்ஜின் கிடைப்பது குறிப்பிட்டதக்கது. ரீடைல் பிரிவில் 9% அளவு லாப மார்ஜின் கிடைக்கும் சூழ்நிலையில் என்டர்பிரைசஸ் பிரிவில் 5% மார்ஜின் மட்டுமே கிடைத்து வருவது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

இதனால் 2017ம் ஆண்டின் அரை வருட நிதி முடிவுகள் கடந்த ஆண்டை விட இரட்டிப்பாக மாறியுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.

பங்கு விலை 440 முதல் 460 ரூபாய் வரை. அதில் P/E மதிப்பு 18க்கு அருகில் வருகிறது. அதிகமான மதிப்பீடல் அல்லவே.

ஆனால் இந்த ஐபிஒ வந்த காலக்கட்டம் என்பது தவறானதோ என்றும் தோன்றுகிறது.

பல்வேறு வகைகளில் ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டமடைந்து வரும் சூழ்நிலையில் எவ்வளவு டிமேண்ட் இருக்கும் என்ற கேள்வியும் எழும்புகிறது.

இன்னும் ரீடைல் பிரிவு வருமானம் 60% என்ற நிலையைக் கூட அடைய வாய்ப்பு உள்ளது என்று நிறுவனம் கருத்து கூறி உள்ளார்கள்.

அதனால் நீண்ட கால நோக்கில் இந்த ஐபிஒ பங்கு பயனைத் தரலாம். ஆனால் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைவே.

தொடர்புடைய பதிவு:
CL Educate IPOவை வாங்கலாமா?



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக