கிராமப்புறங்களில் தங்க நகைகளுக்கான விவசாய கடன் என்பது பிரபலமான ஒன்று.
தங்க நகையை ஈடாக வைத்து எளிதில் விவசாய கடன் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான வட்டியில் பகுதியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு அளித்து வந்தது. இதனால் வட்டியும் 4% என்ற அளவிலே இருந்தது.
அதிக பட்சம் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் அண்மையில் மத்திய அரசு இந்த கடனுக்கான மானியத்தை நீக்கி விட்டது. இதனால் வட்டி என்பது வழக்கமான கடன் போல மீண்டும் 8~9% அளவிற்கு சென்று விட்டது.


