புதன், 25 டிசம்பர், 2013

வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி

பல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.


ஒரு முறை IOB வங்கிற்கு சென்ற போது மகாத்மா காந்தியின் இந்த மேற்கோளை வரவேற்பில் பார்க்க முடிந்தது.

"வாடிக்கையாளர்கள் தான் நமது முக்கிய விருந்தாளி. அவர்கள் நம்மைச் சார்ந்து இருக்கவில்லை. நாம் தான் அவர்களை சார்ந்து இருக்கிறோம்.அவர்கள் நமது வேலைக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் அல்ல. நமக்கு வேலை கொடுப்பவர்கள். அவர்கள் வெளி ஆட்கள் அல்ல. நமது வியாபரத்தின் ஒரு அங்கம். அவர்கள் தான் நமக்கு சேவை பண்ணும் வாய்ப்பை வழங்குபவர்கள்."

House loan

ஆனால் அதே IOB வங்கிற்கு மற்றொரு நாள் வங்கிக் கடனுக்காக சென்ற போது அவர்கள் அந்த அளவுக்கு அலைய வைத்தார்கள். ஒரு வீட்டுகடன் கொடுக்க ஆறு மாதம் எடுத்தார்கள். இது நமது சொந்த ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு.

பிறகு ஒரு வருடம் முன் பெங்களூரில் வீட்டுக் கடன் எடுக்க வேண்டி இருந்தது. மேலே உள்ள அனுபவத்தால் வேறு எளிதான வழிகள் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் தேடிய போது சில பயனுள்ள தளங்கள் கிடைத்தன.

இந்த தளங்கள் மூலம் காந்தியின் மேற்கோள் ஓரளவு பூர்த்தியாவதைக் காண முடிந்தது.

bankbazaar.com

deal4loans.com

rupeezone.com
 தளத்தில் பதிவு செய்த பின்னர் ஓரிரு நாட்களில் பல வங்கிகளில் இருந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருந்தன.

வங்கி வட்டி விகிதம், இதர பதிவுக் கட்டணங்கள் போன்றவற்றை தெளிவாக அறிய முடிந்தது.

முக்கியமாக பல வங்கிகளில் கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள், சேவைகள், இதரக் கட்டணங்கள் போன்றவற்றை எளிதாக ஒப்பிட முடிந்தது.

இந்த போட்டியைப் பயன்படுத்தி நாம் வங்கி வட்டி விகிதத்தில் 0.25~0.5% அளவு குறைக்க பேரம் பேசலாம். தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும் இதில் உள்ளடக்கம்.

சில வங்கிகளின் முகவர்கள் வீட்டுக்கே வந்து "Documents" வாங்கி செல்கிறார்கள். எல்லாம் ஒரு தொழில் போட்டி தான்..

இந்த தளங்களை வீட்டுக் கடனுக்கு மட்டும் அல்லாமல் Personal Loans, Car Loans போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எமக்கு தெரிந்து தற்போது இந்த சேவைகள் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..இந்த தளங்களில் பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது..

If we are having multiple options, then we will be on demand

English Summary:
On-line websites are available to get Home loans easily from banks. They are trying to offer competitive interest rates.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. சிறிய நகரங்களில் வங்கிக்கடன் வாங்க ஏதாவது எளிய வழிமுறைகள் உள்ளதா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! தற்போதைக்கு சிறு நகரங்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை..தெரிந்த பிறகு பகிர்கிறோம்..

    பதிலளிநீக்கு