செவ்வாய், 30 ஜூலை, 2019

பொருளாதார மந்த நிலையை நோக்கி இந்தியா?

எமது கடந்த சில பதிவுகளை பார்க்கும் போது ஒரு வித எதிர்மறை நிலைத்தன்மையை கண்டு இருக்கலாம்.


ஒரு விதமாக இலை மறை காயாக சந்தையின் தன்மையை உணர்த்த பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறோம்.



கடந்த ஒரு மாத காலமாக பார்த்தால் சந்தையில் ஒரு வித நிசப்தத்தை பார்க்க முடிகிறது.

அரசிடம் இருந்து எந்த வித கவர்ச்சி அறிவிப்புகளும் காணோம்.

பட்ஜெட்டும் ஒரு உப்பு சப்பில்லாத பட்ஜெட் என்பதோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட புதிய வரிகளையும் கொண்டிருந்தது.

புதன், 17 ஜூலை, 2019

YES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது?

இன்று பங்குச்சந்தை முடிவிற்கு பின்னர் YES Bank நிறுவன நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


இன்றைய முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்டதாக அமைந்தது.



ஏனென்றால் இதற்கு முன்னர் சிஇஒவாக இருந்த ரானா கபூர் பண்ணிய தகிடுத்தன வேலைகள் ஏராளம்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வித போலி நிதி அறிக்கையே வெளிவந்தது போல.

ஒரு பக்கம் வங்கி வருடத்திற்கு 40% அளவு வளர்ச்சி அடைந்து வந்தது.

புதன், 10 ஜூலை, 2019

வலுவில்லாமல் சரியும் சந்தை, என்ன செய்வது?

நண்பர்கள் பலர் முன்பு போல் எமது பங்கு பரிந்துரை போர்ட்போலியோ சேவை ஏன் கொடுப்பதில்லை? என்று கேட்டு இருந்தனர்.


கடந்த ஒன்பது மாதாங்களுக்கு மேலாக முற்றிலும் நிறுத்தி வைத்து இருந்தோம்.



காரணம் இது தான்.

இந்திய சந்தை ஒரு அடிப்படை இல்லாத சந்தையாக மாறி வருவது போல் ஒரு சந்தேகம் இருந்து வந்தது.

எமது பங்குச்சந்தை அனுபவத்தில் இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலானதை கண்டதில்லை.

வெள்ளி, 5 ஜூலை, 2019

இந்த பட்ஜெட்டிற்கு காவல் எதுக்கு?

என்ன தான் அரசியல் கவர்ச்சிகள் உருவாக்கப்பட்டாலும், மக்களின் வாங்கும் வசதி கூடவில்லை. நிருவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. வேலை வாய்ப்புகளும் இல்லை.


இதனால் தான் மோடியின் பெரிய வெற்றியை கூட சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தை அதிகம் எதிர்பார்த்து இருந்தது நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் தான்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ப்யூஸ் கோயல் ஒரு தேர்தல் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டதால் நிர்மலா அவர்களுக்கு பெரிதளவு வேலை இல்லாமல் பொய் விட்டது.

சந்தை எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

சனி, 29 ஜூன், 2019

FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?

FundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.


சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.



இது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.

நாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.

தற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.

செவ்வாய், 25 ஜூன், 2019

IndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா?

நேற்று ஜூன் 24 முதல் IndiaMart நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளையுடன் முடிவடைகிறது.


அதனை வாங்கலாமா? என்பது பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.



ப்ளிப்கார்ட், அமேசான் போல் இணைய வழியாக பொருட்கள் விற்கும் நிறுவனம் தான் IndiaMart.

ஆனால் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோர்களை விற்பவர்களுடன் இணைக்கிறது.

IndiaMart நிறுவனமானது மொத்த விற்பனையாளர்களுடன் சில்லறை விற்பனையாளர்களை இணைக்கிறது.

செவ்வாய், 18 ஜூன், 2019

கார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்?

தற்போதைய சந்தையின் சரிவிற்கு மிக முக்கிய காரணமாக சுட்டிக் காண்பிப்பது பொருளாதார தேக்கம்.


அதிலும் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களில் பத்து வருடங்களில் இல்லாத அளவு ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது.



இதனை தேக்கம் என்று சொல்வதை விட, வாடிக்கையாளர்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு தற்போது சிட்டியில் கார் வாங்கும் ஒருவர் யோசிப்பது.

ட்ராபிக்கில் எப்படி வண்டி ஓட்டுவது? அப்படியே புதிய இடத்திற்கு சென்றாலும் எங்கு வண்டியை பார்க் செய்வது? என்பது தான்.