வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பொருளாதார செய்தி துளிகள் (14/09)


இது கடந்த வாரத்தில்(07/09 ~ 14/09) வெளிவந்த சில பொருளாதார செய்திகள். இத்தகைய செய்திகளைக் கண்காணிப்பது பங்குச்சந்தை முதலீட்டர்களுக்கு பயனளிக்கும் என்பதால் பகிர்கிறோம்.

வாரந்தோறும் நம்மைக் கடந்து செல்லும் முக்கிய பொருளாதார செய்திகளை பகிர முயற்சிக்கிறோம்.


துளி #1

வருங்கால வைப்பு நிதிக்கான (Provident Fund) வட்டி விகிதம் 8.5% என்று அதிகரிக்கப்பட உள்ளது. இதுவரை 8.25% என்று வழங்கப்பட்டு வந்தது.

விவரங்களுக்கு,
EPFO may approve 8.5% interest rate for 2013-14

துளி #2

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்த சில நடவடிக்கைகளால் ரூபாய் மதிப்பு 6 நாட்களில் 6% மேல் குறைந்தது. தற்போது 1US = 64Rs என்ற அளவில் உள்ளது. 


துளி #3:
இது போக வங்கிகளில் சீரமைக்கப்பட போவதாகவும் அதிக சுதந்திரம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததால் வங்கி பங்குகள் உயர்ந்தன. இனி புதிய வங்கி கிளைகள் திறக்க அதிக நாள் காத்திருக்க தேவையில்லை. நாம் பரிந்துரைத்த HDFC வங்கி கிட்டத்தட்ட 10% அளவு உயர்ந்தது.

விவரங்களுக்கு,
Banks shares in bull grip on measures by Raghuram Rajan

துளி #4:

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை எதிர்பாராத அளவு (15% ) அதிகரித்தது. இதற்க்கு மாருதி நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இதனால் நாம் பரிந்துரைத்த Mahindra & Mahindra வும் 5% அளவு அதிகரித்தது.
விவரங்களுக்கு,
Domestic car sales up 15.37%, bikes grow 3.82% in August

துளி #5:

நாட்டின் காசு உள்வரத்தை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிரந்தர பண வைப்பு வட்டி விகிதத்தை கூட்டியுள்ளது. (NRI Interest Rate)

விவரங்களுக்கு,
கடந்த மாதத்தில் ஆபரணங்கள், ஜவுளி,தோல் துறைகள், வாகனம், தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ. போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உலோகம், போக்குவரத்து போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.

விவரங்களுக்கு,
Unemployment Drops to 7.3 Percent for August 2013

English Summary:
Economical News

தொடர்பான மற்ற பதிவுகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: