சனி, 14 செப்டம்பர், 2013

Astra Microwave: ஏன் பரிந்துரைக்கிறோம்?

கடந்த பதிவில் Astra Microwave நிறுவனத்தின் அறிமுகத்தையும், நிதி நிலை அறிக்கையும் பார்த்தோம். இந்த பதிவில் பரிந்துரைப்பதன் காரணங்களையும் கூறுகிறோம்.

கடந்த பதிவினைக் காண இங்கு அழுத்துங்கள்.

சாதகமான அம்சங்கள்:
  • இந்திய 12வது திட்ட கமிசன் பாதுகாப்பு துறை நிதி ஒதுக்கீடை 900 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தையதை விட 185% அதிகமாகும். அதிலும் இந்த நிதி ஒதுக்கீடு நவீன பாதுகாப்பு சாதனங்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுவது AMPக்கு சாதகமாகும்.
  • இந்த நிறுவனத்தின் தலைமை BEL, DRDO, ISRO போன்ற நிறுவங்களுடன் நல்ல உறவையும் நீண்ட கால வணிக ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. 
  • இது தவிர பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டு உள்ளதால் இந்த அரசு நிறுவனங்கள் உள்நாட்டு நிருவனங்களுக்கே இந்த ஒப்பந்தங்களைக் கொடுக்க வாய்ப்புள்ளது.
  • அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த நிறுவனம் ஏற்கனவே 10.5 பில்லியன் ரூபாய் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. 
  • CRISIL நிறுவனம் 4/5 என்ற மதிப்பீடைக்கொடுத்துள்ளது. இதன் அர்த்தம் "Superior Fundamentals".


  • இது வரை தமக்கு தேவையான "Silicon Chips" அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து பெற்று வந்துள்ளது. இப்பொழுது சொந்தமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது கணிசமான செலவை குறைக்க உதவும்.
  • இது வரை நிலையான "DIVIDEND" தொகை பங்கு தாரர்களுக்கு கொடுத்துள்ளது. (2012 - 35%, 2011 - 25%, 2010 - 25%, 2009 - 25%, 2008 - 12.50%)
  • கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியான நிதி அறிக்கையைக் கொடுத்துள்ளது.
  • இந்த நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக L&T நிறுவனம் இதனை வாங்க தீவரமாக முயன்று வருகிறது. இது வரை 9.72% பங்குகளை பொது பங்குகளில் இருந்து வாங்கியுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் "PROMOTERS" தங்களது பகுதியை வேகமாக அதிகரித்து வருகிறார்கள்.
பாதகமான அம்சங்கள்:
  • "PROMOTERS" 20% பங்கு சதவீதம் மட்டும் கொண்டுள்ளார்கள். அரிதான சாத்தியத்தில் Management கை மாற வாய்ப்புள்ளது. இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே.
  • இந்த நிறுவனத்தின் 62% வருமானம் இரண்டு மிகப் பெரிய "Order"ல் வருகிறது. இதில் ஏற்படும் பாதிப்பு லாபத்தைப் பாதிக்கலாம். இது வரை இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது இல்லை.
இது ஒரு HIGH RISK பங்காக இருப்பதால் தங்கள் கடின தன்மை உணர்ந்து முதலீடு செய்யுங்கள். 5% க்குள் உங்கள் போர்ட் போலியோவில் வைத்து கொள்ளுங்கள். தற்போதைய பங்கு விலை 35 ரூபாய்.

இத்துடன் நமது போர்ட் போலியோவில் 6 பங்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. போர்ட் போலியோவை அப்டேட் செய்கிறோம்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் திரட்டி ஓட்டினை அளியுங்கள். கருத்துகள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டங்கள் இடுங்கள்.

English Summary:
Astra Microwave stock is recommended for investment.

தொடர்பான மற்ற பதிவுகள்:



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக