வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?

கடந்த பதிவில் டாலர் எப்படி உலக பொது நாணயமானது என்பது பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவு அதனுடன் நெருங்கிய தொடர்புடையதால் அதைப் படித்துவிட்டு இதை படியுங்கள்.

முந்தைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்.
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?


இப்படி அரை நூற்றாண்டாக ஓசியிலே சாப்பிட்டு வந்தவர்களுக்கு ஈரான் வடிவில் ஆபத்து வந்தது.

பல ஆண்டுகளாக பெட்ரோலிய பொருட்களின் வர்த்தகம்  North America's West Texas Intermediate crude (WTI), North Sea Brent Crude மற்றும் the UAE Dubai Crude போன்ற வர்த்தக சந்தைகளில் டாலரில் தீர்மானிக்கப்பட்டு வந்தது.

ஆனால் 2008ல் ஈரான் புதியதாக Petrobourse என்ற வர்த்தக சந்தையை ஆரம்பிப்பதாகவும், அங்கு வர்த்தகம் ஈரான் ரியால், யுரோ மற்றும் பல நாணயங்களில் நடக்கும் என்று அறிவித்தது.



உலகின் 25% பெட்ரோலியப பொருட்கள் ஈரானில் இருந்து வருவதால் டாலர் மதிப்பிழந்து விடும் என்று கருதிய அமெரிக்கா உடனே ஈரான் மீது அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் கூறி பொருளாதாரத் தடை விதித்தது. ஆமாம் சாமி ஐரோப்பிய நாடுகளும் இதற்கு ஒத்துக் கொண்டன.

ஆனால் ஈரான் எதற்கும் அசரவில்லை. தனது வர்த்தகத்தை சீனா, ரஷ்யா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் அந்த  நாட்டு நாணயத்தில் வர்த்தகத்தை தொடர்ந்து  நடத்தி வந்தது.
ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் ஈரான் பெட்ரோலிய இறக்குமதியை குறைக்க ஆரம்பித்தது. அதன் பிறகு சிங் அரசும் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான் இறக்குமதியை குறைக்க ஆரம்பித்தது.

இங்கு ஒன்றைப் பார்த்தால் ரஷ்யா, சீனா போன்று இந்தியாவும் பெரிய நாடு தான். அந்த நாடுகள் அமெரிக்காவை கண்டு கொள்ளவே இல்லை. தங்கள் நாட்டு மக்களுக்காக வணிகத்தை தொடர்ந்தன. ஆனால் இந்தியா அமெரிக்காவின் பினாமி போல் நடந்து கொண்டது.



இந்த சமயத்தில் தான் தற்போது நமது ரூபாய் அகல பாதாளத்துக்கு சென்றது. ஏதாவது பண்ணி சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய கட்டாயம். இது போக தேர்தல் வேற வருகிறது. இதனால் தான் நமது பெட்ரோலிய அமைச்சர் ஈரான் வர்த்தகத்தை மீண்டும் புதுப்பிக்க முனைந்துள்ளார்.

இதனால் வருடத்திற்கு 8.5 பில்லியன் டாலர் நாம் சேமிக்கலாம். ரூபாய் வீழ்ச்சியும் கணிசமாக குறையும். அதற்கு நிதி அமைச்சரும் ஆதரவு தருகிறார் என்று அறியப்படுகிறது. ஆனால் நமக்காக ஆள வேண்டிய பிரதமர் அமெரிக்காவுக்கு பயப்படுகிறார். இந்த சமயத்தில் தான் துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய பிரதமர் நமக்கு தேவைப்படுகிறார்.

ஈரானுக்கும் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவிடமிருந்து அரிசி, டீ போன்ற சில பொருட்களை மட்டுமே ஈரான் வாங்கி வருகிறது. மீதி உள்ள இந்திய ரூபாயை வைத்து வெளியில் எந்த பொருளும் வாங்கவும் முடியாது. அது அப்படியே UCO வங்கியில்  தேங்கி கிடைக்கிறது. அதனால் தான் ஈரான் தற்பொழுது 45% மட்டும் ரூபாயில் வர்த்தகம் செய்வதாகவும் மீதியை தங்கமாகவும் வாங்குவதாக கூறுகிறது.

இங்கு நமக்கு உற்பத்தி, ஏற்றுமதி என்று மீண்டும் அதே பிரச்சனை. அரசு இந்த இரண்டையும் அதிகரிக்காத வரை நம்மால் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க முடியாது.

தொடர்பான பதிவுகள்:
ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?
தங்கம் இப்பொழுது வாங்கலாமா?

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

8 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம்.

    ஆசியாவில் இந்தியா ஜப்பான் தென் கொரியா போன்ற முக்கிய நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்திற்கு அடி பணியாமல் சீனா, பாக்கிஸ்தான்,ஈரான் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்து முன்னேற வழி தேட வேண்டும். ஆசியா ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருக்கும் மற்றும் ஒரு பெரிய வளரும் நாடாகிய துருக்கியும் இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    பயனுள்ள பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம்.

    ஆசியாவில் இந்தியா ஜப்பான் தென் கொரியா போன்ற முக்கிய நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்திற்கு அடி பணியாமல் சீனா, பாக்கிஸ்தான்,ஈரான் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்து முன்னேற வழி தேட வேண்டும். ஆசியா ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருக்கும் மற்றும் ஒரு பெரிய வளரும் நாடாகிய துருக்கியும் இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    பயனுள்ள பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கம்.

    ஆசியாவில் இந்தியா ஜப்பான் தென் கொரியா போன்ற முக்கிய நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்திற்கு அடி பணியாமல் சீனா, பாக்கிஸ்தான்,ஈரான் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்து முன்னேற வழி தேட வேண்டும். ஆசியா ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருக்கும் மற்றும் ஒரு பெரிய வளரும் நாடாகிய துருக்கியும் இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    பயனுள்ள பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி மாசிலா! உங்கள் கருத்துகளும் மிக சரி!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அறிவான மற்றும் பயனுள்ள விஷயமாக இருந்தது. மிக்க நன்றி. மேலும் இது போன்று பயனுள்ள விஷயங்களை பகிரவும்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு