வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்! - 3


நமது பங்கு பரிந்துரையில் அடுத்த பங்காக வரும் சனியன்று ஒரு பங்கினை பரிந்துரை செய்கிறோம். அதற்கு முன் அந்த பங்கினை பற்றிய சில குறிப்புகள் கொடுக்கிறோம். அந்த பங்கினை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.


பங்கினைப் பற்றிய குறிப்புகள்:
  • இந்த நிறுவனம் 20 ஆண்டுகளாக ஹைதராபாத் மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
  • இந்தியாவில் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் மிக சில தனியார் நிறுவனங்களில் ஒன்று.
  • இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் BHEL, DRDO மற்றும் ISRO போன்ற அரசு நிறுவனங்கள். 
  • இவர்களது உற்பத்தி பொருட்கள் Radar, Mobile Jammers, Amblifier, Transmitter போன்ற நுண்ணலை சாதனங்கள். 
  • ஆகாஷ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளில் இவர்களது தயாரிப்புகள் உள்ளன.
  • இவர்கள் வருமானம் 72% உள்நாட்டிலும் 28%  ஏற்றுமதியிலும் வருகிறது.
  • கடந்த நிதி ஆண்டில் வருமானம் 13% வளர்ச்சியும், லாபம் 20% வளர்ச்சியும் பெற்றுள்ளது. (Approx.)
  • நிறுவனத்தின் சந்தை மதிப்பு 300  கோடி அளவில் உள்ளது.
  • இவர்கள் "Order Book" அடுத்த 2 வருடங்களுக்கு நிறைந்து கிடைக்கிறது.
  • 12வது நிதி கமிஷன் திட்டங்களால் அதிக பயன் பெரும் நிறுவனம்.
  • L&T நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்க தீவிரமாக முயன்று வருகிறது.
English Summary:
Find this stock..

தொடர்புடைய பதிவுகள்:
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: