இது ஒரு சுய தொழிலுக்கான ஆலோசனை. இந்த பதிவின் சாராம்சம் முகநூலில் எமக்கு கிடைக்கப் பெற்றது. நண்பர் டிமிடித் பெட்கோவ்ஸ்கி அவர்களுக்கு நன்றி! இதனைப் பகிர்ந்து கொள்வது நிறைய பேருக்கு பயனாக இருக்கும். தற்போதைய உலகில் வாய்ப்புகள் பரந்து கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்வோம்!
கால் டாக்ஸி போல் கால் பைக் ஆரம்பிப்பதே இந்த ஆலோசனை. நாமும் பெங்களூரில் இருந்த போது இந்த சிந்தனை இருந்தது. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறோம். நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.
தற்போதைய பெட்ரோல், டீசல் விலையில் மிக பயனுள்ளது கூட. டிராபிக் ஜாம் குறைக்கவும் உதவும். அரசும் உற்சாகப்படுத்தலாம். தாய்லாந்து, இந்தோனேசியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்கள்.
####
கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது?
உங்களது ஊரில் ஒரு நல்ல ஒரு அறையை தேர்ந்தெடுங்கள்.
அதை உங்கள் விலாசமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களது கம்பெனிக்கு 'Fly Bikes & Couriers ' என்று பெயர் வையுங்கள்....
சிறிய துண்டு சீட்டுகள் மூலம் உங்களது கம்பெனி கீழ்க்காணும் சேவைகளை செய்வதாக தெரிவியுங்கள்
- பொருள்களை கொண்டு வருவது மற்றும் கொண்டு சேர்ப்பது... உள்ளூர் மட்டும் .
- வெளியூருக்கு அனுப்பும் கூரியர் பொருள்களை வீட்டிலேயே வந்து வாங்கிச் செல்வது
- வீட்டிற்குத் தேவையான பொருள்களை மாதா மாதம் மளிகைக் கடையில் போன் செய்தால், அவர்கள் கட்டி வைத்தப் பொருள்களை வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுப்பது.
- உடனடி அவசரத் தேவைக்காக மருந்து, உணவு, மற்றும் இரவு நேரங்களில் பிரயாணம் செல்ல போக்கு வரத்து உதவி....
- உடனடி பஸ் பிரயாணம் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் வாங்குதல் போன்ற சேவை
- ஈமெயில் மூலம் உறவினர்களுக்கு செய்தி அனுப்புதல்
- அரசாங்க ஒப்புதல்கள், சான்றிதழ்கள், போன்றவற்றை வாங்கித்தர சேவை
- வியாபாரக் கடைகளின் பொருள்களை குடோனில் இருந்து கடைக்கும், அவர்களது இன்வாய்ஸ், டெலிவரி ஆர்டர் முதலியவைகளை கொண்டு சேர்ப்பது...
தொடர்ச்சியைக் இங்கு காணுங்கள்..
English Summary:
Call Bike business is one of good option for entrepreneur. Reduces fuel consumption and traffic in the country.
Anna u watched movie Porali in that movie this concept came with diff way.
பதிலளிநீக்குநல்ல யோசனை!
பதிலளிநீக்குyes..you are correct..Thanks குழலான் அனுபவங்கள்!
பதிலளிநீக்குநன்றி ராகவன்!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு