நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
ஒன்று, தங்கள் கையில் நிதி குறைவாக இருக்கும் நிறுவனங்கள் கூடுதல் நிதியை திரட்டுவதற்காக பங்குச்சந்தையில் நுழைகின்றன.
இரண்டாவது, பன்னாட்டு நிறுவனங்கள் அரசின் சில கொள்கைகள் காரணமாக அவர்களால் 100% முதலீடு செய்ய முடியாது. குறிப்பிட்ட சதவீதம் தங்கள் பங்குகளை உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது பொது மக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அதனால் சில பங்குகளை பொது பங்குகளாக பங்குச்சந்தையில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பங்குச்சந்தை விதிமுறைகள் கட்டுப்பாடுகள் காரணமாக பல நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற விரும்பும்.
ஏனென்றால் பங்குச்சந்தை விதிமுறைகள் அவர்களை சில சுயமுடிவுகளை சுதந்திரமாக எடுப்பதைத் தடுக்கும்.
அதனால் தக்க சமயங்களில், அதாவது போதுமான நிதி இருக்கும் போது அல்லது அரசின் கொள்கைகள் தங்களுக்கு சாதகமாகும் போது பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி விடும்.
அப்போது வெளியேறும் போது முதலீட்டார்களுக்கு சாதமாகவும் இருக்கும். அதே சமயங்களில் பாதகங்களும் உள்ளன. அதனைப் பற்றி அலசுவதே இந்த பதிவு ஆகும்.
ஒரு நிறுவனம் delist செய்ய விரும்பும் போது பங்குகளுக்கு ஒரு நல்ல விலையை முதலீட்டர்களுக்கு தெரிவிக்கும்.
அந்த பங்கு விலை பங்குச்சந்தை விதிமுறைகளின் படி, குறைந்தபட்சம் 26 வார விலைகளின் சராசரி அல்லது கடைசி இரண்டு வார விலைகளின் சராசரிக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இது போக இந்த delist வெற்றி பெற வேண்டும் என்றால் நிறுவனம் குறைந்தபட்சம் 90% பங்குகளை வாங்கி இருக்க வேண்டும். அப்படி வாங்கவில்லை என்றால் நிறுவனம் பங்குசந்தையில் இருந்து வெளியேற முடியாது.
அவர்கள் சொல்லும் விலைக்கு விற்பதும விற்காததும் முதலீட்டார்கள் விருப்பம். இங்கு தான் முதலீட்டர்களுக்கு விற்கவா, வேண்டாமா என்று குழப்பம் ஏற்படும்.
இந்த சமயங்களில் முதலீட்டார்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க வேண்டி வரும். பங்கு விலை நன்றாக இருந்தால், அதாவது முகமதிப்பு( Book Value) விலையுடன் ஒத்து இருந்தால் விற்று வெளியேறுவதே நலம்.
ஏனென்றால், delist வெற்றி பெற்றால் சிறு முதலீட்டார்கள் தங்களிடம் குறைந்த சத பங்குகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. நிறுவன முடிவுகளில் ஒன்றும் செய்ய முடியாது. கடைசியில் நிறுவனம் கொடுக்கும் குறைந்த விலைக்கு விற்று வெளியேற வேண்டி வரும்.
அதே சமயத்தில் delist தோல்வி அடைந்தால் பங்கு விலை மீண்டும் பழைய விலை அல்லது குறைந்த விலைக்கு சென்று விடும். நிறுவனம் சொல்லிய 'Premium' விலைக்கு மீண்டும் எளிதில் வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அதனால் விற்று வெளியே வருவதே சிறு முதலீட்டார்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்,
இது ஒரு delist தோல்வி உதாரணம்,
2009ல் Suashish Diamonds என்ற நிறுவனம் பங்குசந்தையில் delist பண்ணுவதாக அறிவித்தது. உடனே அதே நாளில் பங்குகள் 20%(Rs.252) கூடின.
அடுத்த பத்து நாட்களில் பங்கு 88% அதிகரித்து 395க்கு விற்றது.
ஆனால் நிறுவனம் 320 ரூபாய் மட்டுமே கொடுக்க முன் வந்தது. இதனால் கடைசியில் delisting தோல்வி அடைந்தது. பின்னர் பங்கு மீண்டும் 171 ரூபாய்க்கு வந்தது.
இது ஒரு delist வெற்றி உதாரணம்,
2003ல் Cadbury நிறுவனம் delist செய்வதாக அறிவித்தது. பங்கிற்கு 500ரூபாய் தருவதாக அறிவித்தார்கள். அவர்களால் 90% பங்குகளை வாங்க முடிந்ததால் delist வெற்றி பெற்றது.
ஆனால் இதனை ஏற்று கொள்ளாத 2.4% பங்குகளை கொண்டுள்ள 8149 பங்குதாரர்கள் நீதிமன்றம் சென்றனர். 2009ல் அந்த நிறுவனம் 1340 ரூபாய் தருவதாக நீதிமன்றத்தில் சொன்னது. அதனையும் பங்குதாரர்கள் நிராகரித்தார்கள்.
பின்னர் 1743, 1900, 2014 என்று இன்னும் கூட்டி தருவதாக அறிவித்தது. இன்னும் நம்ம ஆட்கள் விடுவதாக இல்லை. 2500 வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலை பெரிய முதலீட்டார்களுக்கு ஒத்து வரும். ஆனால் சிறு முதலீட்டார்கள் இந்திய வழக்குகள், நீதிமன்றம் போன்றவற்றை அறிந்து இருப்பதால் பங்கை விட்டு வெளியேறுவது நல்லது.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் கருத்துகள், ஓட்டுகளை அளித்து ஊக்கமளியுங்கள்.
தொடர்புடைய சில பதிவுகள்:
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?
பங்குச்சந்தை எப்படி தொடங்குவது?
Mutual Fund : ஒரு அறிமுகம்
நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.
விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...
எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.
இங்கு எமது ஏற்கனவே பரிந்துரைத்த போர்ட்போலியோ விவரங்களைப் பார்க்கலாம்.

எல்லாம் எங்களுக்கு கொடுத்துருங்க. |

சரி..போயிட்டு வராதீங்க |

அறிமுகம் நண்பர்களுக்கு பயன் உள்ள தகவல் . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு