ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

பங்குச்சந்தை எப்படி தொடங்குவது?

நமக்கு பல மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் இவ்வாறு வருகின்றன.
  1. முதலீட்டு ஆலோசகரை பரிந்துரை செய்யுங்கள்.
  2. பங்குச்சந்தை பற்றி சொல்லிக் கொடுக்கும் வகுப்புகளை பரிந்துரை செய்யுங்கள்.
  3. கட்டண முதலீட்டு ஆலோசகராக இருங்கள். நாம் பணத்தை முதலீடு செய்ய தொடர்பு கொள்கிறோம்.
சில ஆண்டுகள் வெளியே இருந்து விட்டதால் முழுமையான தகவல்கள் தெரியாமல் மேற்படி கேட்ட பரிந்துரைகளை செய்வது கடினமாக உள்ளது.

மீனை பிடித்துக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது. மேலே உள்ள கேள்விகளுக்கு சுய கற்றலே (Self-Learning) பொருத்தமானது என்பதே எமது பதில்.

நமது பணம் எங்கு எப்படி செல்கிறது என்பதை நாம் கட்டாயமாக அறிய வேண்டும்.

ஆரம்பத்தில் பங்குசந்தையை பரஸ்பர நிதியிலே(Mutual Fund) ஆரம்பிப்பதே சிறந்தது. அது கொஞ்சம் பாதுகாப்பானது கூட. அதனை கொஞ்ச நாள் நன்றாக கண்காணியுங்கள். அதன் பிறகு நேரடி பங்குச்சந்தையைப் பற்றி யோசிக்கலாம்.
இனி Mutual Fund பற்றி மிக விரிவாக நாமும் எழுதுகிறோம்.
இந்த அறிமுக பதிவினையும் பார்க்க,
Mutual Fund : ஒரு அறிமுகம்

இந்த இடைப்பட்ட நேரத்தில் புத்தகங்கள் மூலம் நமது பங்குச்சந்தை அறிவை வளர்த்துக் கொண்டு, அதன் பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

நாம் பங்குச்சந்தை பற்றிய தகவல்களுக்கு சில தமிழ் புத்தகங்கள் இணையத்தில் தேடினோம். நிறைய நமக்கு கிட்டவில்லை.

அதே நேரத்தில் ஆங்கிலத்தில் சில எளிய படித்த புத்தகங்கள் குறைந்த விலையில் இணையத்தில் கிடைக்கின்றன. அதனை படித்து பாருங்கள். புத்தகங்கள் பதிவின் இடது பக்கத்தில் பரிந்துரை செய்ப்பட்டுள்ளது.
புத்தகம் #1
பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை (Rich Dad Poor Dad) by Robert T Kiyosaki

சில சமயங்களில் ஏன் பணம் சம்பாதிக்கிறோம் என்று ஒரு வித வெறுப்பு ஏற்பட்ட போது பணத்தின் அருமையை உணர்த்த வைத்த புத்தகம். ஏன் பணக்காரர்கள் பணக்காரர்களாகி கொண்டே போகிறார்கள். ஏழை ஏழையாகவே இருக்கிறான் என்பதை அழகாக விளக்கியுள்ளார். Amazonல் 185 ரூபாய்க்கு கிடைக்கிறது.

புத்தகம் #2
Master the Stock Market By Ashu Dutt

சில பங்குச்சந்தை அடிப்படைகளை கற்றுக் கொள்ள ஏற்ற புத்தகம். இந்த புத்தகத்தில் தினசரி வர்த்தகம் பற்றிய தகவல்களை வேண்டுமென்றால் விட்டு விடுங்கள். எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. Amazonல் 107 ரூபாய்க்கு கிடைக்கிறது.

கொஞ்சம் புத்தக அறிவு வந்த பிறகு FMCG, Pharma போன்ற பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

பங்குச்சந்தை ஒன்றும் நாம் நினைப்பது போல அவ்வளவு கடினமானது அல்ல..கொஞ்சம் கற்றுக் கொண்டால் அப்புறம் மிக எளிது. நம்முடைய இருத்தல் இல்லாமலே நமக்கு பணம் சம்பாதிக்கும் ஒரு எளிய முறை இது..கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்!

இந்த வாரம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

English Summary:
How to start in share market?

தொடர்பான சில பதிவுகள்:
ஒரு பயனுள்ள பதிவு« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக