ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நிலையான வருமானம் பெற ஒரு வழி..Debt Funds

சில நண்பர்கள் நிலையான வருமானம் வர சில வழிகளைக் கூறுமாறு பின்னூட்டம்  இட்டிருந்தார்கள். இப்படி ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட விரும்பவர்களுக்காக இந்த பதிவு.

வழக்கமாக நிலையான வருமானம் என்றால் நமக்கு தெரிந்தது Fixed Deopsit. அது தவிர சில முதலீடுகள் உள்ளன. அதிலொன்று நிறுவனங்கள் வழங்கும் "Tax Free Debt Fund" முதலீடுகள்.


நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய நிதியினை திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடுவதற்கு பதிலாக கடன் பத்திரங்களை வெளியிடும். இந்த கடன் பத்திரங்கள் தான் "Debt Fund" என்று அழைக்கப்படுகிறது.

இதன் படி ஒரு நிலையான வருமானம் வருடந்தோறும் பத்திரம் வைத்து இருப்பவர்களிடம் பகிர்ந்து அளிக்கப்படும்.

இந்த கடன் பத்திரங்கள் அரசு, தனியார் என்ற இரண்டு பிரிவு நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன.

அதிக பாதுகாப்புக்காக சில மத்திய அரசு நிறுவனகள் வழங்கும் பத்திரங்களை மட்டும் அறிமுகப்படுத்துகிறோம்.

மத்திய அரசின் கீழ்க்கண்ட நிறுவனங்கள் வழமையாக கடன் பத்திரங்கள் வெளியிடுகின்றன.

  • Rural Electrification Corporation (REC)
  • Housing and Urban Development Corporation (HUDCO)
  • Infrastructure Finance Company Ltd (IIFCL)
  • Power Finance Corporation ( PFC ).

இவை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள். அது போக இந்த நிறுவனங்கள் "Credit Rating" என்ற தரப் பட்டியலில் "AAA" தரத்தைப் பெற்றுள்ளன. இதனால் இந்த முதலீடுகள் அதிக பாதுகாப்புடையதாக கருதப்படுகிறது.

இந்த பத்திரங்களை எப்பொழுதும் வாங்க முடியாது. ஒவ்வொரு வருடமும் இந்த பத்திரங்களை வெளியிடுவார்கள். ஆனால் குறிப்பிட்ட தேதியில் முடித்து விடுவார்கள். அதற்கு பின் வாங்க முடியாது.


தற்போதைக்கு PFC மற்றும் NHPC போன்ற நிறுவனங்கள் மட்டும் வெளியிட்டு உள்ளன. இவற்றின் முதலீடு செய்ய கடைசி தேதி. நவம்பர் 14, 2013.

  • NHPC கடன் பத்திரங்கள் 10 வருடத்திற்கு 8.43% வட்டியும் 15 வருடத்திற்கு 8.79% வட்டியும் 20 வருடங்களுக்கு 8.92% வட்டியும் அளிக்கின்றது.
  • PFC கடன் பத்திரங்கள் 10 வருடத்திற்கு 8.43% வட்டியும் 15 வருடத்திற்கு 8.79% வட்டியும் 20 வருடங்களுக்கு 8.92% வட்டியும் அளிக்கின்றது.


    இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். "Fixed Deposit" விட என்ன பலன் என்று? இது தான் விடை..

    இந்த பத்திரங்களில் வரும் வட்டி வருமானதிற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால் 20~30% வருமான வரி பட்டியலில் உள்ளவோருக்கு இந்த கடன் பத்திரங்கள் அதிக பலனளிக்கும். இந்த அட்டவணையைப் பாருங்கள்..புரியும். இதில் வருமான வரி விலக்குடன் சேர்த்து 12% அளவு வரை வட்டி பெறலாம்.

    Debt fund

    இந்த பத்திரங்களை எங்கு வாங்கலாம்?
    இவைகளும் Mutual Fund போல் தான். உங்களிடம் Demat Account இருந்தால் எளிதில் வாங்கலாம். 

    அவ்வாறு இல்லாதவர்கள் இந்த தளத்தின் மூலமும் வாங்கலாம்.

    இந்த பத்திரங்களில் உள்ள ஒரு எதிர்மறைத் தன்மை. இவைகள் கூட்டு வட்டி அளிப்பதில்லை. அதாவது ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் வட்டி அந்த வருடமே பகிர்ந்து அளிக்கப்படும். 

    அதனால் ஒவ்வொரு வருடமும் நிலையான வருமானமாக ஓய்வூதியம் எதிர்பார்க்கும் வயதானவர்களுக்கு ஏற்றது. இளைஞர்களுக்கு அவ்வளவு ஏற்றதல்ல.

    English Summary:
    Debt fund is the way for getting Fixed Income. Indian public sector companies are releasing bonds with more than 12% interest rates.

    தொடர்பான பதிவுகள்:
    உங்க PF கணக்கில காசு இருக்குதா? சீக்கிரம் போய் பாருங்க..
    EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா

    மதிப்பு பதிவு:
    Sony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு

    « முந்தைய கட்டுரை




    Email: muthaleedu@gmail.com

    2 கருத்துகள்: