வெள்ளி, 1 நவம்பர், 2013

ஒரு தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது?

நாம் ஒரு பதிவில் CRR எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று எழுதி இருந்தோம்? அதில் ஒரு நண்பர் இவ்வாறு பின்னூட்டம் இட்டிருந்தார். தனி மனிதனாக பணவீக்கத்தை எப்படி சமாளிப்பது? என்று கேட்டிருந்தார். நல்ல கேள்வி. பதில் கொடுப்பது மிக கடினமானது.

நம்மை ஆளும் அரசுக்கு பல வழிகள் உள்ளன. CRR, Repo rate, Reverse Repo rate என்று பல விகிதங்களை கூட்டுவார்கள், கழிப்பார்கள்.


ஆனால் நமக்கு இருக்கும் ஒரே வழி செலவை குறைப்பது. ஆனால் உலகின் எந்த  நாட்டு மக்களை விட, அதிலும் தென் இந்தியர்கள் அதிக சேமிப்பு பழக்கம் உள்ளவர்கள். செலவு மிகக் குறைவு செய்பவர்கள்.

அவர்களிடம் சென்று செலவை குறைக்க சொன்னால்கோபத்தை தான் பதிலாக பெற முடியும். ஏனென்றால் இதற்கு மேல் வழியே இல்லாத போது பட்டினி கிடந்து செலவைக் குறைக்க முடியாது.

அரசில் சிலர்  செய்யும் தவறான கொள்கை முடிவுகள், ஊழல்கள் பலரை பதம் பார்க்கின்றன.

இருந்தாலும் டார்வினின் Survival of the fittest தேற்றப்படி, 'தகுதியுள்ளவையே தப்பிப் பிழைக்கும்'. அதனால் நாமும் ஏதோ ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அதனால் நமக்கு தெரிந்த சிலவற்றைப் பகிர்கிறோம்.

#1
முதலில் அவசர விஷயங்கள் தவிர்த்து எந்த நிகழ்வையும் கொஞ்சம் முன்னதாக திட்டமிடலாம்.

உதாரணத்துக்கு தீபாவளி பஸ் டிக்கெட்டை ஒரு பத்து நாள் முன்னால் முன்பதிவு செய்யும் போது கடைசி நேரத்தில் ஏஜெண்ட்க்கு கொடுக்கும் பணத்தை குறைந்தது 10~20% வரை சேமிக்கலாம். குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு பயன்படுத்தும் போது அதுவும் ஒரு நல்ல சேமிப்பே.

அது போல் சுற்றுலா செல்பவர்கள் அகோடா போன்ற தளங்கள் மூலமாக சில நாள் முன்பு ஹோட்டல் முன்பதிவு செய்யும் போது கணிசமான அளவு சேமிக்க முடிகிறது.

கொசுறு குறிப்புகள்:
இந்த தளத்தில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுக்கு BUSDIWALI என்ற கூப்பனைப் பயன்படுத்தினால் 10% வரை சலுகை கொடுக்கிறார்கள்.
இதற்கான தொடர்பு இங்கே. தீபாவளி பஸ் டிக்கெட் 10% தள்ளுபடி

#2
வளர்ந்த நாடுகளைப் பார்த்தால் அங்கும் பணவீக்கம் ஒரு முக்கிய பிரச்சனையே. ஆனால் அதனை "smart life' என்ற முறையில் அணுகுகிறார்கள்.

முன் கூட்டியே திட்டமிடுதலுடன் நிறுவனங்கள் வழங்கும் "Promotional Offers" என்ற சலுகைகள் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து இருக்கிறது. இதன் மூலம் கணிசமான அளவு சேமிக்கிறார்கள்.

இந்த சலுகைகள் உண்மையிலே சலுகை அல்ல. அவைகள் தாம் அந்த பொருட்களின் உண்மையான விலைகள்.

எமது நண்பர் தமது உற்பத்தி பொருளை விநியோகிக்க 45% டீலர்  கமிசன் கொடுக்கிறார்.

அப்படி என்றால் நினைத்துப் பாருங்கள். பொருளின் நாம் கொடுக்கும் விலையில் 30% தான் பொருளின் உண்மையான விலை. மீதி விலையை இடைத்தரகளுக்கும், ஷோரூம் வாடகை, A/C செலவு என்று தான் கொடுக்கிறோம்.

இதற்க்கு கணினி யகத்தில் கிடைத்த ஒரு அருமையான வழி. இணைய வணிகம். இந்தியாவில் இணைய வணிகம் அடுத்த ஐந்து வருடங்களில் 500% அதிகரிக்குமாம்.

இணைய வணிகத்தில் உள்ள சிறப்பம்சமே பல அடுக்கு தரகர் தன்மை தவிர்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பயனாளர்கள் என்ற மூவருமே பயன் பெற முடிகிறது. இதற்கு ஜஸ்ட் நீங்க உங்க இணைய வங்கியைப் பயன்படுத்த தெரிந்தால் போதும். பெரிய அளவில் கணினி அறிவு எல்லாம் தேவையில்லை.

கொசுறு குறிப்புகள்:
  • புத்தகங்கள், குழந்தைகள் மற்றும் எலக்ட்ரனிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு amazon தளம் நம்பிக்கையான தளம். அவர்களின் "Hot deals" நல்ல பயனுள்ளதாக உள்ளது. அதற்கான தொடர்பு இங்கே.  Amazon Hot Deals
  • ஆடைகள்  மற்றும் வீட்டு பொருட்கள் வாங்குவதற்கு Jabong தளம் நன்றாக உள்ளது.கூப்பன் Code: SHOP30. அதற்கான தொடர்பு இங்கே. Jabong Deals

#3

அடுத்து கெட்டுப் போகாத பொருட்களை தேவையறிந்து மொத்தமாக வாங்கி கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களிலும் 100 கிராமில் பத்து தடவை தாங்குவதை விட ஒரு கிலோவாக வாங்கினால் குறைந்தது 10 முதல் 20 சதவீதம் வரை சேமிக்கலாம். எப்படியும் பயன்படுத்த தான் போகிறோம் என்றால் பெரிதுக்கே போகலாமே.
#4
இறுதியாக மீட்டார் போடாமல் கந்து வட்டி வசூலிக்கும் ஆட்டோக்களுக்கு பதிலாக கால் டாக்ஸி பயன்படுத்தலாம். 

தனியாக செல்லும் போது காரைத் தவிர்க்கலாம். குறைந்த தூரம் போவதென்றால் சைக்கிளில் அல்லது நடந்து செல்லலாம்.  

பெரிய வீடுகளை வாங்குவோம். அதற்கு பிறகு பெரிய அளவில் பரமாரிப்பு செலவுகளை செய்வோம். பெரிய பிரிட்ஜ் வாங்கி அதிக மின்சாரம் செலவளிப்போம். 

இதற்கு பதிலாக நமது தேவைக்கேற்ப மட்டும் வாங்கினால் பல காலம் செலவழிக்க வேண்டிய பரமாரிப்பு தேவைகளை தவிர்க்கலாம்..

கொசுறு குறிப்புகள்:
இணையத்தில் Ola Cabs முதல் தடவை முன் பதிவு செய்யும் போது AWT4Q1 என்ற கூப்பன் பயன்படுத்துங்கள். அடுத்த முறை 500 ரூபாய் சலுகை கிடைக்கும். அதற்கான தொடர்பு இங்கே. www.olacabs.com

இங்கு நாம் கூறிய ஆலோசனைகள் ஒன்றும் எமது புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. இவை நமக்குள் ஒளிந்து கிடப்பவை. அதனை சற்று ஞாபகப்படுத்தி உள்ளோம்.

சில குறிப்புகள் இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டது. இதில் income-expense போக்கு வரைபடம்(Flow Diagram) ஒன்று வரும். அந்த ஒரு படம் மட்டுமே பல விஷயங்கள் சொல்லும்..படித்துப் பாருங்கள்...


குறைந்த செலவில் நிறைவான தீபாவளி கொண்டாட revmuthal.com தளத்தின்  வாழ்த்துக்கள்!

இந்த பதிவும் பயனாக இருக்கலாம்.

English summary:
How to face Inflation as an individual?

மேலும் சில கூப்பன் மற்றும் சலுகை விவரங்களை இந்த இணைப்புகளில் பெறலாம்.
www.mathippu.com
http://www.revmuthal.com/p/blog-page_18.html« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: