செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மியை அமைதியாக எதிர்கொண்ட சந்தை

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அளவு துடைப்பத்தைக் கொண்டு கிளீன் ஸ்வீப் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்!
டிவி, ரேடியோ, பத்திரிகை என்று எது பார்த்தாலும் மோடி வந்து விளம்பரம் செய்வதை பார்த்து மக்கள் சலித்துப் போயிருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அந்த அளவிற்கு விளம்பரங்களை "Spam/Junk Mail" ரேஞ்சிற்கு மாற்றி விட்டார்கள்.

பத்து மாதங்கள் ஆட்சியில் முழு மெஜாரிட்டியில் இருந்ததால் இதனை விட அதிகம் செய்து இருக்கலாம்.

வாஜ்பாய் இருந்த போது தங்க நாற்கர சாலை திட்டம் பெரிதாக பேசப்பட்டது. அது அதிக அளவில் நேர்மறை விளைவுகளை பொருளாதரத்தில் ஏற்படுத்தியது.

ஆனால் மோடியிடம் இருந்து அத்தகைய உருப்படியான பெரிய திட்டங்களை காண முடியவில்லை என்பது குறையே. கவர்ச்சி திட்டங்களின் தாக்கம் தான் அதிகம் தெரிந்தது.

இது போக தேவையில்லாத பிளவுபடுத்தும் பேச்சுக்களும் முக்கிய காரணமாக அமைந்து இருக்கும்.

ஆம் ஆத்மியின் வெற்றி மோடியை சுய பரிசோதனை பார்க்க பெரிதும் உதவும் என்று நம்புவோம். அது தான் நாட்டிற்கும் நல்லது கூட.

பங்குச்சந்தை ஏதோ ஆம் ஆத்மியின் வெற்றியை முன்னரே அறிந்தது போல் அமைதியாக இருந்து கொண்டது. ஒரு வேளை கடந்த ஏழு நாட்கள் கணிசமாக குறைந்ததும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் 27K முதல் 29K என்பதை சென்செக்ஸ் இடைவெளியாக பார்த்து சந்தையை தொடர்வது நல்லது.

மோடி செய்யத் துணிந்த அரசின் வருமானத்தை பெருக்கும் சில நடவடிக்கைகள் இன்னும் வெளிப்படையான பலன்களை கொடுக்க ஆரம்பிக்கவில்லை. இவற்றின் பலன் தெரியும் போது மந்தமான சந்தை தெளிய ஆரம்பிக்கும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக