சனி, 14 பிப்ரவரி, 2015

எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது

விடுமுறையில் இந்தியா சென்ற போது நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டிய சூழ்நிலை. வழக்கமாக கூச்ச சுபாவத்தின் காரணமாக பயணங்களில் அருகில் இருப்பவர்களிடம் பேசுவது கிடையாது.


ஆனால் அன்றைய பயணத்தில் எம்மை விட அதிகம் பேசுபவர் திருநெல்வேலியில் அருகில் வந்து அமர்ந்தார். அதனால் உரையாடல் உருவானது.




அவரது பேச்சின் அறிமுகத்தில் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்களுக்கும் முதலீட்டு நிறுவனங்களுக்கும் பங்குகளை பரிந்துரை செய்யும் பொருளாதார கண்சலடன்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்பது தெரிய வந்தது. எமக்கும் அதில் ஈடுபாடு அதிகம் என்பதால் உரையாடல் தொடர்ந்தது.

கூடவே சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விற்கு செல்லும் நண்பர் ஒருவரும் இணைந்து கொண்டதால் சுவராஸ்யமாகவே இருந்தது.

அரசியலில் மோடி விளம்பரம் செய்வது, கேஜ்ரிவால், நியூட்ரினோ மையம் என்று பல தலைப்புகளில் பேச்சு சென்றது.

இறுதியில் பொருளாதார துறையில் வேலை பார்க்கும் அந்த நண்பர் சொன்னது அதிர்ச்சியாகவே இருந்தது.

பல நிறுவனங்கள் இத்தகைய கண்சலடன்ட் நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளின் விலைகளை கூட்டுவதற்கு தங்கள் நிறுவனத்தைப் பாரவையிடுமாறு தாங்களாகவே சென்று அழைப்பு விடுமார்களாம்.

பல வெளியில் வராத தகவல்கள் முன் கூட்டியே இந்த கண்சலடன்ட் நிறுவனங்களுக்கு நிறுவனர்கள் மூலம் தெரிந்து விடுமாம்.

இந்த சில ரகசிய தகவல்கள் வெளியில் செல்வதையும் அதை வைத்து பங்கில் ஏற்படும் மாற்றங்களை நிறுவனம் விரும்புவதில்லை.

இதனால் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நண்பரால் சுதந்திரமாக பங்கு வர்த்தகம் செய்ய முடியாதாம். அப்படி செய்வதாக இருந்தாலும் முதலில் எந்த பங்குகளை வாங்குகிறோம் என்பதை நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பங்குகளை குறைந்தது ஒரு வருடத்திற்கு விற்க கூடாதாம்.

கூடவே, இவ்வாறு பொருளாதார துறையில் வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் நேர்-குடும்பத்தினர் விவரங்கள் செபியால் சேமிக்கப்பட்டு அதிக அளவில் கண்காணிக்கப்படுவதாகவும் சொன்னார்.

கண்ணெதிரே தாம் தெரிந்த தகவல்களை வைத்து பங்குகள் ஏற்றம் காண்பதும், அதனை வைத்து பலன் அடைய முடியாததையும் நினைத்தால் கொஞ்சம் கொதிப்பு வரத் தான் செய்யும்.

கஷ்டம் தான்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக