மோடி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28ல் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த வருடம் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டது ஒரு இடைக்கால பட்ஜெட் என்பதால் சில விடயங்களில் முழுமையான முடிவுகளை எடுக்க முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போதைய பட்ஜெட் அப்படி அல்லாமல் முழுமையான திசையைக் காட்டும் விதத்தில் அமையவிருக்கிறது.
முதலாளிகளுக்கான பங்குச்சந்தை எப்பொழுதுமே பட்ஜெட்டில் வரிக்குறைப்பு, மானியம் குறைத்தல் என்று அதிகமாகவே எதிர்பார்க்கும்.
அந்த எதிர்பார்ப்பில் சில இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும் என்றே தெரிகிறது. தற்போது நிதி பற்றாக்குறை 4.1% என்று உள்ளது. அதனை 3.6% என்று குறைப்பதை அரசு இலக்காக அறிவித்துள்ளது.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அதிகம் பயனடைந்தது இந்திய அரசாக இருக்க முடியும். இது போக நேரடி மானிய முறையில் போலி கேஸ் இணைப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். இது தவிர வரி செலுத்துவோருக்கு கேஸ் மானியம் கிடையாது என்பது எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.
இது போக, உர மானியம், விவசாய மானியக் குறைப்பு என்று பல பேச்சுக்கள் இருந்தாலும் டெல்லி தேர்தலில் தோற்றுப் போய் விட்டதால் சாத்தியம் குறைவே.
அடுத்து, ரியல் எஸ்டேட் வீழ்ந்துள்ளதா எழுந்துள்ளதா என்று தெரியாமல் மிக அமைதியான நிலையில் உள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக தனி நபர் வரி சலுகைகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
வருடத்திற்கு 3 லட்சம் வரை வீட்டுக் கடனில் வரி விலக்கு அளிக்கப்படலாம் என்ற பேச்சு உலவுகிறது.
மத்திய அரசின் பல திட்டங்களுக்கு மூடுவிழா வரலாம் அல்லது அந்த திட்டங்கள் மாநில அரசுகளுக்கு மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மாநில அரசுகளின் நிதிகளை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது. GST வரி விதிப்பு செயல்பாட்டில் வேகம் ஏற்படலாம்.
நல்ல பெயர் வாங்குவதற்கு தனி நபர் வரி விதிப்பில் உச்ச வரம்பு உயரலாம். சிகரெட்களுக்கு வரி விதிப்பு அதிகரிக்கப்படலாம்.
தற்போது சந்தை 29,000 என்ற பிடியில் அழுத்தமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அநேகமாக மார்ச் மாத போர்ட்போலியோவில் முடிவெடுக்க சில நல்ல தெளிவுகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக