சனி, 28 பிப்ரவரி, 2015

பங்குச்சந்தையின் பார்வையில் 2015 பட்ஜெட்

நேற்று ரயில்வே பட்ஜெட்டை எதிராக எடுத்துக் கொண்ட சந்தை இன்றைய ஜெட்லியின் பட்ஜெட்டை மாறாக எடுத்துக் கொண்டு நேர்மறை புள்ளிகளில் சென்றது. இதற்கு நேற்று வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் ஒரு காரணமாக அமைந்தது.


பொதுவாக பட்ஜெட் என்பது வரவு செலவு காட்டும் நிதி அறிக்கையே. அதனுடன் புதிய சில வரி விதிப்புகள் இருக்கும் என்பதால் சில பொருட்களின் விலைகள் கூடும். ஆனால் நமது பங்குசந்தையில் மீடியாக்களின் புண்ணியத்தால் சந்தை அதிக வினையாற்றி புரட்டி போட்டுவிடப்படுகிறது.



இந்தக் கட்டுரையில் பங்குச்சந்தையை பாதிக்கும் பட்ஜெட் குறிப்புகளை மட்டும் பார்ப்போம்.

கனரக இறக்குமதி வாகனங்களுக்கு சுங்க வரி அதிகமாக்கப்பட்டுள்ளது. இது Ashok Layland, Tata Motors நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

நிறுவனங்களுக்கான வரி 30% என்பதிலிருந்து 25% என்று குறைக்கப்பட்டுள்ளது சாதகமான விஷயம். அதே நேரத்தில் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. GST வரி முறையில் மும்முரம் காட்டுவதும் தெரிகிறது.

சொட்டு நீர் பாசன விவசாயத்திற்கு 5000 கோடி ரூபாய் மேல் ஒதுக்கப்பட்டதால் Jain Irrigation போன்ற பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது.

ஒரு லட்சம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்படும் என்று உறுதி அளித்துள்ளதால் அரசு காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு ஆர்டர் புக்கில் நல்ல மாற்றங்கள் கிடைக்க உதவும். இதே போல் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெபிட், கிரெடிட் கார்டு பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று சொல்வதால் வங்கிகளுக்கு நல்ல விடயமாக பார்க்கப்படும்.

சிகரெட்டுகளுக்கு 25% அதிக வரி விதிக்கப்பட்டது. இதனால் ITC நிறுவன பங்குகள் 8% அளவு சரிந்தன.

வெளிநாட்டு முதலலீட்டாளர்களுக்கு சில சலுகைகளும், சில வழிமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆக, பங்குச்சந்தைக்கு பெரிதளவில் பாதகமில்லாமல் நடந்து கொண்டதால் சந்தையும்  இறுதியாக 100 புள்ளிகள் மேல்  உயர்வு அடைந்தது. இனி சந்தை நிதானமாக நின்று சுயபரிசோதனை செய்து கொள்ளும் என்று நம்பலாம்.

எமது அடுத்த கட்டண போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வெளிவரும். 1200 ரூபாயில் 8 பங்குகள் பரிந்துரைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க..அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: