செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஏற்றம் காணும் பொருளாதார தரவுகள் மெய்யாகுமோ?

இன்னும் விடுமுறை காலத்தில் தான் உள்ளோம். சில விசேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவமனை விடயங்கள் காரணமாக முழு நேரத்தையும் உபயோகிக்க வேண்டி இருந்தது. இதனால் கட்டுரைகள் எழுதுவது கடினமாகவே இருந்தது.


இந்த இரு வார இடைப்பட்ட காலத்தில் பங்குச்சந்தையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளில் அறிவிக்கப்பட்ட நிதி மாற்றங்கள் முதல் நேற்றைய ரிசர்வ் வங்கியின் SLR குறைப்பு வரை செய்திகள் தொடர்ந்தது.



இதை எல்லாம் தாண்டி நிறுவனங்களின் நிதி முடிவுகள் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் கூட ஓரளவு நல்ல நிதி அறிக்கைகளை கொடுத்து இருந்தது.

ஆனால் வங்கி பங்குகள் நிதி முடிவுகள் அவ்வளவு நன்றாக இல்லை என்பது கவலைக்குரிய விடயம். அதிலும் வாரக் கடன்கள் எந்த வித முன்னேற்றமும் அடையவில்லை என்பது பொருளாதார வளர்ச்சியின் மீது சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஊரிலுள்ள நிலவரத்தை நேரில் அறியும் போது ஏற்றம் காணும் பொருளாதார தரவுகள் எந்த அளவு உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ரியல் எஸ்டேட், எலெக்ட்ரிக் கடை, ஸ்டீல் பாக்டரி என்று பல தொழில்களில் இருப்பவர்களிடம் விசாரித்தால் நன்றாக செல்லவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

அடுத்து டெல்லி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. பிஜேபிக்கு சறுக்கல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருக்கும் சூழ்நிலையில் சந்தையில் சரிவுகள் இருக்கலாம்.

அதே போல் அடுத்த மாதம் வரவிருக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் பூர்த்தி செய்ய முடியுமா என்ற சந்தேகமான சூழ்நிலை உள்ளது.

ஆக தற்போதைய நிலையில் சென்செக்ஸ் 29000 என்ற நிலையில் இருப்பது அதிகபட்ச நிலையாகவே கருதிக் கொள்ளலாம்.

அரசாங்கத்தின் அறிவுப்புகளை நம்பாமல் நல்ல நிதி முடிவுகளை தரும் நிறுவனங்களை மட்டும் நம்பி முதலீடு செய்யும் காலமிது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக