ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஊக்குவிக்கப்படும் பாதுகாப்பு துறை பங்குகள்

கடந்த வாரத்தில் விமான பெங்களூரில் நடைபெற்ற கண்காட்சியின் போது மோடி உள்நாட்டில் பாதுகாப்பு சமபந்தப்பட்ட தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.


இது வரை இந்தியா 60% பாதுகாப்பு உபகரனங்களை இறக்குமதி செய்து வந்தது . இனி 70% பாதுகாப்பு உபகரனங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படும் என்று மோடி அறிவித்துள்ள்ளார். இது பல உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இந்த அறிவிப்பு பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகளுக்கு உற்சாகத்தை அளித்தது.



இதனால் நமது போர்ட்போலியோவில் உள்ள ASTRA MICROWAVE என்ற பங்கு ஒரே நாளில் 15% உயர்ந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

பாதுகாப்பு துறையில் வெளிநாட்டு முதலீடு வரம்பு அதிகரிக்கப்பட உள்ளது என்பதும் தொழில் நுட்பங்களை உள்நாட்டிற்கு கொண்டு வர உதவும். இதன் மூலம் வெளிநாட்டு-உள்நாட்டு நிறுவனங்கள் கூட்டு இணைப்பில் நிறைய ப்ராஜெக்ட்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் பட்ஜெட்டிற்கு அடுத்து முதலீடு செய்யும் போது பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகளை கவனித்துக் கொள்ளுங்கள். அதிக ரிடர்ன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அருமையான பதிவு. ஒரு பேட்டியிலிருந்து கூட பங்கு சந்தையின் ஓட்டத்தை கனிக்க வேண்டும் என கற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு