திங்கள், 23 பிப்ரவரி, 2015

இந்திய GDPயைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்

நேற்றைய நாடாளுமன்ற துவக்க உரையில் ஜனாதிபதி GDP வளர்ச்சி 7.5% எனபதிற்க்கும் மேல் அடைவது சாத்தியம் என்று பேசி இருக்கிறார்.


இவ்வளவு நாள் 5.5% வளர்ச்சி அடையும் என்று சொல்லி வந்த சூழ்நிலையில் திடீரென்று ஏழு சதவீதத்திற்கும் மேல் வளரும் என்று சொல்கிறார் என்கிற குழப்ப நிலை வரலாம்.அதற்கு முக்கிய காரணம் இந்திய GDPயைக் கணக்கிடும் முறையில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வரை தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பை வைத்து மட்டும் அளவிடப்பட்டது. அதாவது பொருள் உற்பத்தியாக தேவைப்பட்ட செலவு.

ஆனால் இனி நுகர்வோர்கள் அந்த பொருளை இறுதியாக வாங்கும் விலையை வைத்து GDP மதிப்பிடப்படும்.

இதன்படி, மக்களின் வாங்கும் சக்தி, பணவீக்கம், வரிகள் போன்றவையும் GDPயைக் கணக்கிடும் போது உள்ளடங்கி விடும்.

முந்தைய கணக்கீட்டின் படி, 2013-14ம் ஆண்டில் GDP வளர்ச்சி 4.7% என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் புதிய கணக்கின் படி இதே ஆண்டில் GDP வளர்ச்சி 6.9% என்று வரும். ஆக, காங்கிரஸ் காலத்திலும் நல்ல வளர்ச்சி வந்துள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பு GDP கணக்கிட அடிப்படை வருடமாக 2004-05 என்பது எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது அடிப்படை வருடம் 2011-12 என்று மாற்றப்பட்டுள்ளது.

முன்பு 2,500 நிறுவனங்களின் தரவுகள் மட்டும் GDP கணக்கிட எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது ஐந்து லட்ச நிறுவனங்களின் தரவுகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

உலக அளவில் தற்போதைய மாற்றப்பட்ட முறையே பின்பற்றப்படுகிறது. இதனால் மற்ற நாடுகளின் GDP வளர்ச்சியை ஒப்பிடும் போது இந்த மாற்றப்பட்ட முறை சரியாக அமையும். அந்த வகையில் இந்த மாற்றம் வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.

பார்க்க:
GDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக