ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF

இன்னும் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றாக அமையும்.


DLF நிறுவனம் பெங்களூர், டெல்லி என்று மாநகரங்களில் அபார்ட்மென்ட் கட்டி விற்று வருகிறது.



தற்போது அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட அபார்ட்மென்ட்கள் போதிய அளவு விற்காததால் பணம் முடங்கி நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது 4 பெரிய ப்ராஜெக்ட்களில் உள்ள அபார்ட்மெண்ட்களில் உள்ள தமது 50% பங்கை மற்ற நிறுவனங்களிடம் விற்க முனைந்துள்ளது. இதன் மூலம் 3000 கோடி அளவு பணம் திரட்டப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான ப்ரொஜெக்ட்கள் வணிகம் அல்லாத வீட்டு மனை குடியிருப்புகளே.

இதனால் நகரங்களில் பிளாட்கள் வாங்க செல்லும் போது அவசரத்தில் முடிவு எடுக்க வேண்டாம். திறமையாக பேரம் பேசும் போது நல்ல விலை குறைப்பையும் தற்போது பெறலாம்.

பொருளாதார முன்னேற்றம் என்ற செய்திகள் ரியல் எஸ்டேட்டை அந்த அளவு மேலே கொண்டு செல்லவில்லை என்பதும் உண்மையே.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக