வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் SBI

கடந்த காங்கிரஸ் அரசால் மிக முக்கியமாக பாதிக்கப்பட்டது SBI வங்கியும் ஆகும். மொத்தமாக கடன்களை தள்ளுபடி பண்ணியது ஒரு இக்கட்ட நிலைக்கு தள்ளியது.


அதே போல் மல்லையா போன்ற வியாபர பெரும் புள்ளிகள் கடனை வாங்கி கொண்டு மொத்தமாக பணத்தை ஆட்டையை போட்டதும் வங்கியின் லாப விகிதத்தை கணிசமாக குறைத்தது.அதன் பிறகு நிர்வாகம் மாற்றப்பட்ட போது ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக வங்கி மீண்டும் திறன்பட செயல்பட ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை சந்தையில் இருந்து வந்தது.

இன்று வந்த SBI வங்கியின் நிதி முடிவுகள் ஒரு நல்ல திசையைக் காட்டியுள்ளது என்றும் சொல்லலாம்.

வட்டி வளர்ச்சி 9% என்று வந்துள்ளது. இதர வருமானங்கள் 24% வளர்ந்துள்ளது. முக்கியமாக வாரக் கடன் விகிதம் நன்கு குறைந்துள்ளது.

மீண்டும் அடானிகளுக்கு அரசியல் குறுக்கீடுடன் கடன் கொடுக்காத வரை SBI வங்கிக்கு நல்ல எதிர்கால வாய்ப்பு உள்ளது!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: