வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சந்தையில் உற்சாகத்துடன் உலகக் காரணிகள்

சிறிது நாள் தொய்வினால் இறங்கி வந்த இந்திய பங்குச்சந்தை கடந்த இரு நாட்களாக நல்ல உயர்வை சந்தித்தது. அதற்கு உள்நாட்டுக் காரணிகளை விட உலகக் காரணிகள் முக்கிய பங்கு வகித்தது.


நேற்று அமெரிக்கா சந்தை நல்ல உயர்வை சந்தித்தது. அதற்கு சிஸ்கோ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மிக சிறந்த நிதி அறிக்கைகள் காரணமாக அமைந்தன.



அதே போல் ஆன்லைன் சுற்றுலா தொழிலில் இருக்கும் Tripadvisor, Expedia போன்ற நிறுவனங்களும் சிறந்த நிதி அறிக்கையைக் கொடுத்தது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் 10% க்கும் மேல் உயர்வை சந்தித்தது குறிப்பிட்டத்தக்கது.

சுற்றுலா தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் நல்ல நிலையில் செயல்படுவது பொருளாதார தேக்கங்களின் மீதான சந்தேகங்களை குறைக்கிறது. ஏனென்றால் அதிகமாக பணம் இருக்கும் போது தான் மக்களும் சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.

அதனால் பணப்புழக்கம் வீழ்ந்துள்ளது என்றும் சொல்வதற்கில்லை.

இதே போல் அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்ட தரவுகளும் நன்றாக வந்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு நன்றாக உள்ளது. நண்பர்கள் மூலமும் அங்கு பொருளாதாரம் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.

கடுமையான பொருளாதார சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதுவதற்கு சக்தி இல்லாமல் தான் இருந்து வந்தது. நேற்று இது தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்பது சாதகமாக விடயம்.

பார்க்க: உலக அரசியலில் தள்ளாடும் ரஷ்ய பொருளாதாரம்

மேலும் பிரச்சனைகளில் இழுத்து விடாமல் இருப்பதற்கு இந்த அமைதி உதவும்.

அதே போல் ஜப்பான் பொருளாதாரமும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் நாணய மதிப்பும் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையும் 7% அளவு உயர்ந்துள்ளது.

பார்க்க: பொருளாதார வீழ்ச்சிக்குள் நுழையும் ஜப்பான்

இவ்வாறு இந்த வாரம் நடைபெற்ற சில உலக நிகழ்வுகள் பங்குச்சந்தையில் இருப்பவர்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது.

ஆனாலும் இந்திய உள்நாட்டு பொருளாதாரம் தொடர்பான தெளிவு இன்னும் அனுமானிக்க முடியவில்லை. அதற்கு இன்னும் ஓரிரு வாரங்களாவது தேவைப்படும் என்று நினைக்கிறேன்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக