திங்கள், 2 ஜூலை, 2018

பங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்!

இருபது வருடங்களுக்கு முன்னர் பங்குசந்தையில் முதலீடு என்பது இப்போது உள்ளது போல் கணினி முறைகளில் இல்லை.


அதனால் ஏகப்பட்ட அசௌகரியங்கள் இருந்தன.



நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாது. அப்படியே ஆர்டர் செய்தாலும் எதிர்பார்த்த பங்கு விலைகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.


அதற்கு அதிக அளவு புரோக்கர் கட்டணம் கொடுக்க வேண்டி இருந்தது.

அதன் பிறகு பங்குகளில் முதலீடு செய்ததற்கான அத்தாட்சியினை காகித வடிவத்தில் கொடுப்பார்கள். இதனை Stock Certificate என்று அழைப்பார்கள். இது நமது கையில்  கிடைப்பதற்கும் நாளாகும்.

அதன் பிறகு கடந்த இரண்டு சகாப்தங்களாக எல்லாமே மாறி விட்டது. அனைத்தும் Demat என்ற எலெக்ட்ரானிக் வடிவத்தில் வந்து விட்டது.

தற்போது மூன்று நாட்களில் எல்லா டெலிவரி காண்ட்ராக்ட்களும் செட்டில் செய்யப்பட்டு விடுகின்றன. அதற்கு இடையில் தேவைப்பட்டால் கூட விற்றுக் கொள்ள முடிகிறது.

தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து விட்டது.

பங்குசந்தையில் இருக்கும் செபி, புரோக்கர், முதலீடு செய்பவர்கள் என்ற மூவருக்குமே தற்போதைய முறை எளிதாக இருப்பதால் Demat என்பது கட்டாயமாக மாறும் சூழ்நிலை வந்து விட்டது.

அதனால் செபி வரும் டிசம்பர் 5, 2018ம் தேதிக்குள் பங்குகளை காகித வடிவத்தில் வைத்து இருக்கும் அனைவருமே டிமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று கூறி விட்டது.

அவ்வாறு மாற்றா விட்டால் அனைத்துமே வெறும் காகிதம் தான். மதிப்பில்லை என்பதையும் கவனிக்க!

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமான பணம் இப்படி காகித வடிவத்தில் தான் உள்ளது.

அதிலும் ITC, Reliance, MRF, Sun Pharma போன்ற நீண்ட வரலாறுடைய நிறுவனங்களில் தான் இந்த மாதிரியான பங்குகள் அதிகம் உள்ளன. இந்த பங்குகள் மதிப்பும் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மடங்குகளில் பெருகி விட்டன.

இப்படி காகித வடிவத்தில் இருக்கும் போது டிவிடென்ட் கொடுக்குமிடத்தில் சிலர் புகுந்து விளையாடி விட்டதும் இந்த அவசர முடிவிற்கு ஒரு காரணம். தங்களது வங்கி கணக்குகளுக்கு திருப்பி விடும் செயல்களும் நடந்து உள்ளது.

அதனால் இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். உங்களது முதலீடு பாதுகாப்பாகவும் இருக்கும்.

இருபது வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்து அதில் போனஸ், Split என்று செய்து இருப்பார்கள். தற்போது பங்கு மதிப்பை பார்த்தால்  பல மடங்குகளில் பெருகி இருக்கும்.

அதனால் அவசர முக்கியத்துவம் கொடுத்து மாற்றி விடுங்கள்!



வழிமுறை என்னவென்று பார்த்தால்,

முதலில் ஒரு டிமேட் கணக்கை திறக்க வேண்டும்.

அதன் பிறகு Demtaterialisation Request Form (DRF) படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் உங்களது அடையாள அட்டை நகலையும் அனுப்ப வேண்டும்.

அடுத்த 45 நாட்களில் உங்களது டிமேட் கணக்கிற்கு பங்குகள் வரவு வைக்கப்படும். அதன் பிறகு விற்றுக் கொள்ளலாம்!

இதற்கு எமது உதவி தேவைப்பட்டால் கீழே அல்லது இடது புறத்தில் உள்ள டிமேட் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்!

Revmuthal.com தளம் டிமேட் கணக்கினை Angel Broking வழியாக திறந்து மேலே சொன்ன வழிமுறைகளுக்கு உதவி காட்டும்.

தனியாக டிமேட் கணக்கு திறக்க வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம்.

muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக