வியாழன், 26 ஜூலை, 2018

ம்யூச்சல் பண்ட் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நேரமிது

தற்போது டிவியை திறந்தால் 'Mutual Fund Sai Hai' என்று வரும் விளம்பரங்கள் ம்யூச்சல் பண்ட் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கின்றன.


ஆனால் அதே பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் விளம்பரங்களாகவே காட்டப்படுகின்றன.



அதிலும் விளம்பரத்தில் இறுதியில் 'ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை' என்பதும் சிறிதளவில் கவனிக்கபடாத ஒன்றாகவே தான் இருக்கிறது.

அதனால் மக்களும் நம்பி முதலீடுகளை போடுவதும் அதிகரித்து வருகிறது.

ம்யூச்சல் பண்ட் என்பதே நமது சார்பாக மற்றொருவர் பங்குசந்தைகளில் முதலீடு செய்து லாபம் கொடுக்கிறார் என்பது தான்.


ஆனால் அந்த ம்யூச்சல் பண்ட்களிலும் பல பிரிவுகள், உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் நமக்கு தேவை என்ன என்பதை அறிந்தே முதலீடு செய்ய வேண்டும்.

இதில் செய்யும் நமது தவறு தான் நாம் எதிர்பார்த்த ரிடர்னை கொடுக்க முடியாமல் செய்கிறது. அல்லது நஷ்டங்களையும் கொடுக்கிறது.

இதனால் ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்வதற்கு முன் அதனை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சந்தையில் 2500 ம்யூச்சல் பண்ட்கள் இருந்தன. அதில் உள்ள உட்பிரிவுகளை கணக்கிட்டால் 9000க்கும் மேல் செல்லும்.

இதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு நாம் பங்குகளிலே முதலீடு செய்யலாம் என்று தான் தோன்றும்.

ஆனால் அண்மையில் செபி இதனை முறைப்படுத்தி உள்ளது.

மொத்தமாக எல்லா ம்யூச்சல் பண்ட்களையும் 36 பிரிவில் உள்ளடக்கி உள்ளது.

இந்த எல்லா உட்பிரிவுகளையும் நாம் நான்கே பெரும் பிரிவிற்குள் அடக்கி விடலாம்.

அந்த பெரும் பிரிவுகள் தான் equity, debt, hybrid மற்றும் solution-oriented என்பவையாகும்.

EQUITY:

இந்த Equity பிரிவு என்பது அதிகம் பங்குசந்தைகளில் மட்டும் செய்யப்படும் முதலீடு. ரிஸ்க் அதிகமானது. அதே போல் அதிக அளவு ரிடர்னையும் எதிர்பார்க்கலாம்.

இதில் large-cap, Large-Mid Cap, Mid Cap, Small-cap, Multicap, ELSS என்ற உட்பிரிவுகள் இருக்கின்றன.

large-cap பண்டில் 80% பெரிய நிறுவனங்களிலே முதலீடு செய்யப்பட வேண்டும்.

Mid Cap பண்டில் 65% நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

Small-cap பண்டில் 65% சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

Large-Mid Cap என்பது நடுத்தர, பெரிய நிறுவனங்கள் கலந்து செய்யப்படும் முதலீடு.

Multicap பண்டில் எல்லா வகை நிறுவனங்களும் கலந்து இருக்கும்.

ELSS பண்டில் வருமான வரி விலக்கிற்காக முதலீடு செய்யப்படும் பண்ட். இதில் மூன்று வருடங்களுக்கு முதலீடுகளை எடுக்க முடியாது.

DEBT:

இந்த பிரிவில் உள்ள முதலீடுகள் பெரும்பாலும் கடன் பத்திரங்களிலே இருக்கும். பங்குசந்தைகளில் முதலீடு செய்யப்படாது.

ரிஸ்க் குறைவாக இருக்கும். வங்கி பிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு இதனை மாற்றாக கருதலாம். அவற்றை விட சிறிது அதிக ரிடர்ன் கொடுக்கும்.

அதிலும் சில பாண்ட்கள் வருமான வரி விலக்கு கூட கொடுக்கும்.


HYBRID:

மேல் சொன்ன DEBT, EQUITY என்ற இரண்டு பிரிவுகளையும் கலந்து கொடுக்கப்படுபவை தான் இந்த HYBRID பண்ட்.

இதில் Conservative, Balanced, Aggressive என்று மூன்று பிரிவுகள் உள்ளன.

Conservative பிரிவில் 75~90% அளவு DEBT கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். மீதி பங்குசந்தையில் இருக்கும்.

Balanced பிரிவில் 40~60% அளவு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். மீதி பங்குசந்தையில் இருக்கும்.

Aggressive பிரிவில் 65~80% அளவு பங்குசந்தையில் முதலீடு செய்யப்படும். மீதி கடன் பத்திரங்களில் இருக்கும்.

SOLUTION-ORIENTED:

இந்த பிரிவில் வரும் பாண்ட்கள் சில துறை சார்ந்து மட்டும் முதலீடு செய்யப்படும். முன்பு Pharma, IT, FMCG என்று சில பிரிவுகளை பார்த்து இருப்பீர்கள். அந்த வகை தான் இது.


இறுதியாக,

இந்த புதிய பிரிவுகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே அமலுக்கு வந்து விட்டது. அதனால் ஏற்கனவே இருக்கும் ம்யூச்சல் பண்ட்கள் கூட மாறுதலுக்கு உட்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு மாற்றம் ஏற்படும் போது சில பாண்ட்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படலாம்.நாம் முதலீடு செய்த பண்ட்கள் செய்யும் முதலீடுகள் கூட மாற்றமடையும்.

அதனால் நாம் எதிர்பார்த்த ரிடர்ன் கொடுக்க முடியாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது.

மீண்டும் இந்த பாண்ட்கள் எந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன என்பதை பார்த்து நமது முதலீடுகளை மறு பரிசீலனை செய்யும் நேரமிது.

மேலே சொன்ன புதிய பிரிவிகள் அடிப்படையில் Revmuthal.com வழியாக சில புதிய பாண்ட்களை ஒரு வாரத்தில் பரிந்துரை செய்கிறோம்.

மூன்று ம்யூச்சல் பண்ட்கள் 600 ரூபாய் கட்டணத்தில் பரிந்துரை செய்யப்படும்.

அதோடு ம்யூச்சல் பண்ட்கள் டிமேட் அக்கௌன்ட் இருந்தும் தற்போது வாங்க முடியும். சாதகமானது என்னவென்றால் பங்கு மற்றும் ம்யூச்சல் பண்ட் பரிவர்த்தனைகளை ஒரே கணக்கில் இருந்து செய்யல்லாம். அதற்கும் நாம் உதவி செய்கிறோம்!

தேவைப்படின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்க!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக