ஒவ்வொரு வருடமும் ஜூலை 31க்குள் வருமான வரி பதிவு செய்ய வேண்டும்.
இந்த வருடமும் வருமான வரி பதிவு செய்வதற்கான கடைசி தேதி நெருங்குகிறது.
ஆனால் இந்த வருடம் முதல் அரசு கட்டாய அபராதம் நிர்ணயித்துள்ளது.
ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு பதிவு செய்தால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அதே நேரத்தில் டிசம்பர் 31க்கு மேல் பதிவு செய்தால் 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அதனால் முடிந்த வரை அபராதம் தவிர்த்து வருமான வரியை பதிவு செய்ய முயலுவோம்.
புதிய விதியாக அடுத்த வருடம் மார்ச் 31க்கு மேல் வருமான வரியை பதிவு செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்க.
மற்ற மாற்றங்களையும் பார்ப்போம்.
முன்பு மாத சம்பளம் மட்டும் வருமானம் உள்ளவர்கள் ITR–1 (Sahaj) என்ற படிவத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது.
அது போல் இந்தியாவில் வருமானம் இல்லாத வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூட இந்த படிவத்தை நிரப்பி வந்தார்கள்.
ஆனால் தற்பொழுது ITR–2 படிவத்தை பயன்படுத்தி அங்குள்ள சொத்து நிலவரங்கள், மற்ற இதர வருமானங்களையும் குறிப்பிட வேண்டும்.
இந்த முறை விதி விலக்கிற்காக 19200 ரூபாய் பயணப்படியாகவும், 15000 ரூபாய் மருத்துவ செலவிற்கும் வரி விலக்கிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். 2 லட்சம் வரை முதலீடுகளுக்கு 80c வரிவிலக்கு பெறலாம்.
இந்த வருடம் வரை மட்டும் ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்த பங்கு வருமானத்திற்கு வரி இல்லை. அதே நேரத்தில் ஒரு வருடத்திற்குள் விற்ற பங்குகளுக்கு லாபத்தில் 15% வரியாக கட்ட வேண்டும். அடுத்த வருடம் முதல் இந்த விதி முறை மாறுகிறது.
அதே நேரத்தில் தங்கம், ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த வருமானங்களுக்கு 20% வரி கட்ட வேண்டும்.
ITR–2 படிவத்தை பயன்படுத்தி இந்த அதிகமான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
மற்ற படிவங்களை வியாபார மூலங்களில் கிடைத்த வருமானத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
பகுதி நேர வேலைகளில் கிடைத்த வருமானத்தில் ஏற்கனவே வரி பிடிக்கப்பட்டு இருந்தால் 26AS என்ற படிவத்தை வருமான வரி தளத்தில் பெற்றுக் கொண்டு குறிப்பிடலாம். அதனால் முன்பு பிடிக்கப்பட்ட வரியை தற்போது ஈடு செய்து கொள்ளலாம்.
வருமான வரியை வருமான வரி தளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
அதில் கடினம் இருப்பின், ClearTax.in போன்ற இணையதளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில் ClearTax பயன்படுத்தி வருகிறோம். ஆதார் எண்ணை பயன்படுத்தி எளிதாக பதிவு செய்ய முடிகிறது.
இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட அனைவரும் வருமான வரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அதே போல், வருமானமே இல்லாவிட்டாலும் 'வருமானம் இல்லை அல்லது குறைவு' என்று பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் வங்கி கடன் வாங்க, விசா விண்ணப்பிக்க கூட தேவைப்படுகிறது.
முன்பை விட வருமான வரி படிவம் முக்கிய தேவையாக உள்ளது. அதனால் பதிவு செய்க!

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசார், நீங்கள் இதற்கு முன்பு cleartax.in தளத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையைப் படித்து நான் கடந்த இரண்டு வருடங்களாக டாக்ஸ் ஃபைலிங் செய்து வருகிறேன் மிக அருமையான தளம் மிக மிக நன்றி
பதிலளிநீக்கு