வியாழன், 19 ஜூலை, 2018

TCNS Clothing IPOவை வாங்கலாமா?

நேற்று ஜூலை 18 முதல் TCNS Clothing நிறுவனத்தின் விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன.


இந்த ஐபிஒவினை வாங்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.



TCNS Clothing நிறுவனமானது பெண்களுக்கு தேவையான ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

இதனுடைய பிராண்ட்கள் W, Aurelia மற்றும் Wishful என்ற பெயர்களில் அறியப்படுகிறது.

இதில் W என்பது நகரங்களில் பிரபலமானதே.மேல் உள்ள லோகோவை பார்த்தால் தெரிய வரும்.


பெண்களுக்கான தினசரி உடைகள், வழக்கமான உடைகள், அலுவலக உடைகள் என்று பல விதங்களில் இவர்கள் தயாரிப்புகள் வருகின்றன.

கடன் எதுவும் இல்லை. பிரான்சிஸ் வழியாக இயங்குவதால் காபிடல் அதிகம் தேவையில்லாத பிசினஸ் மாடல்.

நேபாளம், மொரிசியஸ், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன.

மொத்தமாக 3000 பணியாளர்கள் பணி புரிகின்றனர். 20 வருட அனுபவம் வாய்ந்த நிறுவனம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வருமானம் 488 கோடியில் இருந்து 849 கோடியாக அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் லாபம் 41 கோடி நஷ்டத்தில் இருந்து  98 கோடி லாபமாக அதிகரித்து உள்ளது.

நல்ல நிதி நிலை மற்றும் வளர்ச்சி என்று சொல்லலாம்.

தற்போது ஒரு பங்கின் விலை 716 ரூபாய் என்று சொல்லியுள்ளார்கள். அதில் P/E மதிப்பை பார்த்தால் 44க்கு அருகில் வருகிறது.

கொஞ்சம் அதிகமான P/E தான். ஆனால் இதே துறையில் இருக்கும் அதித்ய பிர்லா போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு.

கச்சா எண்ணெய் அதிகரிப்பு, துணி இழை விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வரும் வருடங்களில் மார்ஜின் குறையலாம்.

அதே நேரத்தில் GST போன்ற காரணங்களால் இந்த மாதிரியான வரையறுத்தப்பட்ட டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பலன் பெற வாய்ப்பு உள்ளது.

குறுகிய கால லாபம் குறைவாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் ஒரு நல்ல நிறுவனம் போல் தெரிகிறது. தொடரலாம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக