தற்போது சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகளை எழுதுவதை விட முதலீடு பார்வையில் கட்டுரைகள் எழுதுவது எமக்கும் உற்சாகமாக இருக்கிறது.
அதன் மாற்றத்தை கடந்த சில மாதங்களில் Revmuthal.com தளத்தில் கவனித்து இருக்கலாம்.
தற்போதைய சூழ்நிலை ட்ரேடர்களுக்கு தான் முழுமையாக சாதகமாக உள்ளது.
அதில் Value Investing என்பது பெரிது பலன் தரப் போவதில்லை.
ஆனால் எல்லாம் அடுத்த வருட பொது தேர்தல் வரை தான் நீடிக்கும் . அதன் பிறகு மீண்டும் சந்தை முதலீடு பார்வையில் திரும்பும் என்று பலமாக நம்புகிறோம்.
அதனால் சோர்வடையாது முதலீடுகளை தொடர்க!
இனி முதலீட்டு பார்வையில் ஒரு துறையினை பார்ப்போம்.
இந்தியாவை பொறுத்தவரை சேவை துறை என்பது மற்ற நாடுகளை விட பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இதற்கு இங்கு இருக்கும் மிகப்பெரிய மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம்.
ஒரு மினி உலகமே இந்தியாவில் இருக்கும் போது நமக்கு தேவையானவற்றில் கச்சா எண்ணையை தவிர மீதி எல்லாவற்றையும் நாமே தீர்த்துக் கொள்ளலாம்.
அந்த சேவைத் துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்று.
2009 பொருளாதார தேக்கத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்ட ஒரு துறை சுற்றுலாத் துறை.
உலக அளவிலான தேக்கத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செலவு செய்வதும் குறைந்து போனது. அதனால் ஹோட்டல்களில் Occupancy Rate என்பது மிகவும் குறைந்து போனது.
இதனால் Average Revenue Per Room என்பதும் குறைந்து பல ஹோட்டல்கள் தங்களது கிளைகளை விற்கும் நிலைக்கு கூட தள்ளப்பட்டன.
சுற்றுலா துறையின் முக்கியத்துவத்தை அனுபவித்து அறிந்த மோடியின் அரசு:) கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்த சில நடவடிக்கைகள் தற்போது இந்த துறையை மீண்டும் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
UIDAN திட்டத்தில் இரண்டாம் நிலை நகரங்களும் கூட விமான சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அரசு மானியமும் வழங்கப்படுவதால் ரயிலில் ஏசி கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அவ்வளவு வித்தியாசமும் இல்லை.
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த 2500 ரூபாய் என்பது பெரிதல்ல என்பதால் அதிக பயணத்தில் நேரத்தை வீணாக்காமல் அதிக இடங்களை காணுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இது ஹோட்டல், சுற்றுலா திட்டமிடுதல் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு சாதகமான விடயமாகும்.
இது போக, நிறைய நாடுகளுக்கு On-Arrival Visa கூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏர்போர்ட்டில் கூட விசா பெற முடியும்.
மேலும் e-tourist விசாவும் வழங்கப்பட்டுள்ளதால் பெரிதளவிலான சிரமங்களை தவிர்க்க உதவும்.
சின்ன, சின்ன மாறுதல்கள் தான். ஆனால் பெரிதளவு பலன்களை கொடுக்கும் வலிமையுடையது.
தற்போது இந்தியாவின் ரூபாய் மதிப்பும் அதிக அளவு வீழ்ந்துள்ளது. முன்பு ஒரு டாலருக்கு 60 ரூபாய் கிடைத்தது என்றால் தற்போது 70 ரூபாய் கிடைக்கும். ஆக, சுற்றுலா பயணிகளுக்கு கிட்டத்தட்ட 20% லாபம்.
எல்லாம் தவிர்த்து, இந்தியாவை முன்பு நிர்பயா கொலை வழக்கு போன்றவை ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்கி இருந்தது.
அது போன்றவை தற்போது மறைந்து வருவதும் சாதகமான விடயம்.
இவ்வளவு நேரம், வெளிநாட்டு பயணிகளை பார்த்தோம்.
மற்றொரு புறத்தில் இந்தியர்களும் அதிக அளவு சுற்றுலா துறைக்கு செலவழிக்க ஆரம்பித்து உள்ளார்கள். அதனை வெட்டி செலவு என்று எண்ணியது கூட மாறி உள்ளது என்று சொல்லலாம்.
முன்பு தகவல்கள் குறைவு என்பதன் காரணமாக ஒரு பாதுகாப்பு அச்சம் புதிய ஊர் என்பதால் இருந்தது. ஆனால் Goibibo, Redbus போன்ற இணைய தளங்கள் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி விட்டது என்று சொல்லலாம்.
சூழ்நிலைகள், எண்ணங்களில் மாற்றம் போன்றவை அடுத்த பத்து ஆண்டுகளில் சுற்றுலா துறை பங்குகளில் பல மடங்குகளில் லாபம் கொடுக்கலாம்.
Indian Hotels, Mahindra Holidays போன்ற ஹோட்டல் பங்குகளையும் Cox & Kings, Thomas Cook போன்ற சுற்றுலா திட்டமிடல் பங்குகளையும் கூர்ந்து கவனித்து வாருங்கள்!
அதிக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது!

முதலீடு தொடர்பான எமது கட்டுரைகளை பெறுவதற்கு இடது புறம் உள்ள படிவத்தை நிரப்புங்கள்! அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக