செவ்வாய், 24 ஜூலை, 2018

HDFC AMC IPOவை வாங்கலாமா?

நாளை ஜூலை 25 முதல் HDFC AMC நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.


அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.HDFC AMC என்பது HDFC குழுமத்தின் ஒரு பிரிவு தான். HDFC Asset Management Company என்பதன் சுருக்கம் தான் இந்த நிறுவனம்.

அதாவது மக்களின் சேமிப்பிற்கு தேவையான ம்யூச்சல் பண்ட், இன்சுரன்ஸ் போன்றவற்றில் நிதி மேலாண்மை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் Standard Life நிறுவனமும் குறிப்பிட்டத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளது.


இது தவிர HDFC ஊழியர்களுக்கும்  பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மேலாண்மையில் 51% க்கும் மேலான நிதி பங்குச்சந்தை சார்ந்தே நிர்வகிக்கப்படுகிறது.

இந்த மாதிரியான பங்குச்சந்தை சார்ந்த நிதிகளில் கட்டணம் என்பது அதிகமாக இருப்பதால் இதில் அதிக அளவு மார்ஜினும் HDFC AMCக்கு கிடைத்து வருகிறது என்பது சாதகமான விடயம்.

தற்போது அடிக்கடி விளம்பரங்களில் ம்யூச்சல் பண்ட் தொடர்பானவற்றை அதிகம் பார்க்கிறோம்.

குறைந்து வரும் வங்கி வட்டி விகிதங்களால் மக்கள் ஒரு மாற்று சேமிப்பு முறையை நாடி வருகின்றனர். அதில் ம்யூச்சல் பண்ட் ஒரு முக்கிய இடம் பெற்று இருப்பது என்பதை மறுக்க இயலாது.

உலக அளவில் 32% அளவு ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்து வரும் நிலையில் இந்தியாவில் 11% பகுதியே ம்யூச்சல் பண்ட்டிற்கு வருகிறது.

இந்த நிலை விரைவில் மாறும் சூழ்நிலையில் ம்யூச்சல் பண்ட் வளர்ச்சி என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் இருக்கலாம்.

அந்த சூழ்நிலையில் இந்திய வங்கி துறையில் HDFC என்ற ப்ராண்டிற்கு அதிக நம்பிக்கை இருப்பது என்பதும் இந்த நிறுவனத்திற்கு மார்கெடிங் செய்வதற்கு எளிதாக அமைகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வியாபாரம் 19% வருடத்திற்கு என்ற விகிதத்தில் இரண்டு மடங்கு வளர்ச்சியை பார்த்துள்ளது. அதே அளவில் லாபமும் அதிகரித்து உள்ளது.

அதனால் நிதி நிலைமை சாதகமாகவே உள்ளது.

அதிக பட்ச விலையான 1100 ரூபாய் பார்த்தால் P/E மதிப்பு 32க்கு அருகில் வருகிறது.

இந்திய பங்குசந்தையில் Reliance Nippo நிறுவனம் மட்டும் இதே துறையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதனை விட 20% அதிக ப்ரீமியம் விலை இது.

ஆனாலும் HDFC ப்ராண்ட், துறை அனுபவம், மார்ஜின் போன்றவற்றை ஒப்பிடுகையில் இந்த ப்ரீமியம் நியாயப்படுத்தப்படுகிறது.

அதனால் குறுகிய காலம், நீண்ட காலம் என்ற இரண்டிற்குமே லாபம் கிடைப்பதற்கு HDFC AMC IPOவில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூலை 27 ஆகும்.

IPO விண்ணப்பிப்பதற்கு டிமேட் கணக்கு இல்லை என்றால் muthaleeedu@gmail.com என்ற முகவரியில் எம்மை தொடர்பு கொள்ளலாம். உதவி செய்கிறோம்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக