வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி கொண்டிருக்கும் கேரள மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறோம்!


கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளம் அங்கு மட்டுமில்லாமல் பங்குசந்தையில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



கேரளாவை மையமாக வைத்து அதிக அளவில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

அங்கு ஏற்பட்டிருக்கும் அழிவு என்பது நூற்றாண்டு காணாத ஒன்று என்பதால் மீண்டு வருவதில் தாமதம் ஏறபடவும் வாய்ப்புகள் உள்ளது.

இதனால் கேரளாவை மையமாக வைத்து இயங்கும் South Indian Bank, Federal Bank போன்றவற்றின் வாராக் கடன், டெபாசிட் வளாச்சி போன்றவை பாதிப்புக்கு உள்ளாக அதிகம் வாய்ப்புள்ளது.

இதே போல்  Manappuram, Muthoot Finance நிறுவனங்களும் கேரளாவை மையமாக வைத்தே இயங்குகிறது. அதனுடைய வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.

அடுத்து இந்தியாவின் ரப்பர் உற்பத்தியில் பெரும்பகுதி கேரளாவில் இருந்தே வருகிறது.

ஏற்கனவே வெளிநாட்டு ரப்பர் விலைகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் உள்நாட்டிலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வாய்ப்புகள் உள்ளன.

இதனால் ரப்பரை மூலப் பொருளாக கொண்ட டயர் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதே போல் Cochin Shipyard நிறுவனமும் சில நாட்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளதால் இந்த நிறுவனமும் இந்த காலாண்டில் குறைவான வளர்ச்சி கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

மேற்சொன்ன நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் சூல்நிலையில் சில நிறுவனங்களுக்கு வேறு விதத்தில் வியாபர வாய்ப்புகள் கிடைக்கலாம்.

14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரிய அளவில் மீள் கட்டமைப்பு தேவைப்படும்.

இது கேரளாவில் இருந்து அதிக வருமானத்தை பெறும் Malabar Cements, Ramco Cements போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.

ஒருத்தருடைய நஷ்டம் மற்றொருவருக்கு லாபம். அது தான் பங்குச்சந்தை...!!!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக